போன் பேட்டரி சீக்கிரம் காலியாகாமல் இருக்க... இந்த டிப்ஸ் கை கொடுக்கும்..!

ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, அத்தியாவசிய பொருளாக  மாறி விட்டது. இந்நிலையில்,  போன் பேட்டரி அதிக நேரம் நீடிக்காமல் முக்கியமான நேரத்தில் பேட்டரி காலியாவது பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். 

பேட்டரி நமது ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி நன்றாக இருந்தால், பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்கலாம் . இந்நிலையில், செல்போன் பேட்டரி சீக்கிரம் காலியாவதை தவிர்க்க கடைபிடிக்க வேண்டிய டிப்ஸ் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 

1 /8

செல்போன் பேட்டரி: ஸ்மார்ட்போன் ஒரு மணி நேரம் அல்ல, சில நிமிடங்கள் வேலை செய்யவில்லை என்றாலும், நமது பணிகள் அனைத்தும் ஸ்தம்பித்து விடும். ஏனெனில் செல்போன் என்பது தொலை தொடர்பு சாதனம் மட்டுமல்ல, பணப் பரிவர்த்தனை முதல், முக்கிய ஆவணங்கள், புகைப்படங்களை பரிமாறிக் கொள்வது, பொழுதுபோக்கு அம்சம் என, நமது பல விதமான அன்றாட வேலைகளை ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே மேற்கொள்கிறோம். 

2 /8

பேட்டரி திறன்: பேட்டரி நமது ஸ்மார்ட்போனுக்கு உயிர் கொடுக்கும் பேட்டரி நன்றாக இருந்தால், பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்கலாம் . நமது போனின் பேட்டரி, சீக்கிரம் சார்க் காலியாகி விட்டாலோ சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ, பழுதாகிவிட்டாலோ, நமது முக்கியமான பல வேலைகள் நின்றுவிடும்.  

3 /8

திரையின் பிரகாசம்: தொலைபேசியின் பேட்டரியை காலி செய்யும் முதன்மையான காரணிகளில் ஒன்று திரையின் பிரகாசம். திரையின் பிரகாசத்தை குறைந்த நிலையில் வைத்திருப்பதன் மூலம் ஃபோனின் பேட்டரி ஆயுளை கணிசமாக நீட்டிக்க முடியும். செட்டிங்க்ஸ் > காட்சி > பிரகாசம் என்பதற்குச் சென்று, ஸ்லைடரை உங்களுக்கு வசதியாக இருக்கும் குறைவான நிலையில் செட் செய்யலாம்.  

4 /8

பின்னணியில் இயங்கும் செயலிகள்: போனில் பின்னணியில் இயங்கும் செயலிகள் அதிக பேட்டரி சக்தியை பயன்படுத்துகிறது. பேட்டரி ஆயுளை மேம்படுத்த,  நீங்கள் பயன்படுத்தாத செயலிகளை மூடுவதும், அத்தியாவசியமற்ற செயலிகளுக்கான நோட்டிபிகேஷனை முடக்குவதும் பலன் தரும்.

5 /8

பவர் சேவிங் மோட்: போனில் உள்ள பவர் சேவிங் மோட் அம்சம் பேட்டரி பயன்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. பவர் சேவிங் மோட்  ஆன் செய்வதால், பேட்டரி நன்றாக மிச்சப்படுத்தலாம் பின்னணியில் இயங்கும் செயலிகளை  கட்டுப்படுத்துதல், திரையின் பிரகாசத்தைக் குறைத்தல் ஆகியவை இதன் மூலம் செயல்படுத்தப்படும்.

6 /8

மென்பொருளைப் புதுப்பித்தல்: பொதுவாக ஸ்மார்போன் நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு, போனின் அபரேடிங் சிஸ்டத்திற்கான அப்டேட்களை வழங்குகின்றன. மென்பொருள் புதுப்பிப்புகள் பெரும்பாலும் பேட்டரி ஆயுளை மேம்படுத்தக்கூடிய அம்சங்களுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

7 /8

தேவையற்ற அம்சங்களை முடக்கவும்: சமீபத்திய One UI உடன் வரும் பல ஸ்மார்ஃபோன்கள், தொடர்ந்து பயன்படுத்த முடியாத பல்வேறு அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளுடன் வருகின்றன. NFC, Bluetooth, Wi-Fi மற்றும் இருப்பிடச் சேவைகள் போன்ற அடிப்படை அம்சங்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை முடக்கலாம்.  

8 /8

டார்க் மோட் ஆன் செய்யவும்: டார்க் மோட் என்பது ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் அம்சமாகும். டார்க் மோட் என்னும் அம்சத்தை ஆன் செய்வதன் மூலம், பேட்டரி ஆயுளைச் சேமிக்கலாம், இது, குறிப்பாக OLED திரைகள் கொண்ட சாதனங்களில் மின் நுகர்வு குறைக்கிறது.   OLED டிஸ்ப்ளே கொண்ட தொலைபேசிகளில்.