Duplicate Charger: போனை காலி செய்யும் டூப்ளிகேட் சார்ஜர் ... அடையாளம் காண சில டிப்ஸ்...

அசலை  மிஞ்சும் அளவிற்கு அட்டகாசமான முறையில் போலிகள் உருவாக்கப்படுகின்றன. அதனால் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போலிகளை எப்படி கண்டுப்பிடிக்க வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 

ஸ்மார்ட்போன் சார்ஜர், தரமானதாகவும், போனிற்கு பாஅதிப்பு ஏதும் ஏற்படுத்தாததாகவும் இருக்க வேண்டும். இல்லை என்றால், உங்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் சேதமடையும் வாய்ப்பு உண்டு.

1 /7

தரமான சார்ஜர்: ஸ்மார்ட்போன் பழுதடையாமல் எப்போதும் நல்ல நிலையில் இருக்க, அதனை சார்ஜ் செய்ய பயன்படுத்தும் சார்ஜர், தரமானதாக இருக்க வேண்டும்.  

2 /7

டூப்ளிகேட் சார்ஜர்கள் ஸ்மார்போனை காலி செய்துவிடும். இந்நிலையில், நீங்கள் வாங்கும் சார்ஜர் ஒரிஜினலான சார்ஜர் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.  

3 /7

வெடிக்கும் போன்கள்: போலி சார்ஜர் போன் வெடிக்க காரணமாகின்றன. சார்ஜ் செய்யும் போது போன் வெடித்து சிதறிய சம்பவங்கள் அதிகம். பல சம்பவங்களில் தொலைபேசி வெடிப்புகளால் உயிர்கள் பலியாகின்றன. எனவே எச்சரிக்கை தேவை.  

4 /7

UMANG செயலி: நீங்கள் வாங்கும் சார்ஜர் ஒரிஜினல் தானா என்பதை  கண்டறிய உமங் செயலி உதவும். உமங் செயலியை பதிவிறக்கி உங்கள் ப்ரோபைலை உருவாக்கி, 'BIS R number verify'  என்ற அம்சத்தின் உதவியுடன் சார்ஜரை அடையாளம் காணலாம்.  

5 /7

BIS Care செயலியை பதிவிறக்கம் செய்து, நீங்கள் வாங்கிய சார்ஜரில் இருக்கும் BIS - R எண்ணை உள்ளிட்டால், அந்த சாதனத்தை தயாரித்தவர் யார் என்று முழு விவரங்களும் இருக்கும். இதன் மூலம் உங்கள் தயாரிப்பு ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை அறிந்து கொள்ளலாம்.  

6 /7

அங்கீகரிக்கப்பட்ட டீலர்: எப்போதும் அங்கீகரிக்கப்பட்ட டீலர் சேவை மையத்தில் சார்ஜரை வாங்குவது நல்லது. இதனால் டூப்ளிகேட் சார்ஜர் வாங்குவதை தவிர்க்கலாம். செலவு கொஞ்சம் அதிகமானாலும், உங்கள் சாதனம் பாதுகாப்பாக இருக்கும்.  

7 /7

பார்கோட் ஸ்கேன்: நீங்கள் வாங்கும் சார்ஜரின் பெட்டியில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்வதன் மூலம்,  உங்கள் சார்ஜர் ஒரிஜினலா அல்லது டூப்ளிகேட்டா என்பதை அறிந்து கொள்ளலாம்.