ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?

Team India: இந்திய அணி 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த வகையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் குறித்து இதில் காணலாம். 

  • Jun 13, 2024, 21:29 PM IST

இந்திய அணி 2013ஆம் ஆண்டில்தான் கடைசியாக ஐசிசி கோப்பையை வென்றது.

 

1 /8

இந்திய அணி இதுவரை ஐசிசி உலகக் கோப்பை (1983, 2011), ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை (2002, 2013) தலா 2 முறையும், ஐசிசி டி20 உலகக் கோப்பை (2007) 1 முறையும் வென்றுள்ளோம். இதில் 2002  சாம்பியன்ஸ் டிராபியை இலங்கையுடன் பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.   

2 /8

சுனில் வால்சன்: 1983ஆம் ஆண்டு இந்திய அணி முதல் முறையாக ஐசிசி உலகக் கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த சுனில் வால்சன், அந்த தொடரில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.   

3 /8

ஜெய் பிரகாஷ் யாதவ்: 2002ஆம் ஆண்டு கங்குலி தலைமையில் இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அந்த அணியில் இடம்பெற்றிருந்த இவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.   

4 /8

பியூஷ் சாவ்லா: 2007ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்ற நிலையில், அத்தொடரில் இவர் ஒரு போட்டியில் கூட பங்கேற்கவில்லை.  

5 /8

முரளி விஜய்: அதே 2013 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முரளி விஜய்யும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. 

6 /8

இர்பான் பதான்: 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்திய அணி இரண்டாவது முறையாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. இந்த தொடரில் இர்பான் பதான் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.   

7 /8

அமித் மிஸ்ரா: 2013ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி ஸ்குவாடில் இருந்த அமித் மிஸ்ரா, ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.   

8 /8

வினய் குமார்: அதேபோல், இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான வினய் குமார் 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை.