TATA மோட்டார்ஸ் நிறுவனம் தனது வாகனங்களின் விற்பனையை அதிகப்படுத்தும் வகையில் Safari, Harrier, Tiago போன்ற வாகனங்களுக்கு ரூ.60,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
TATA மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த சில மாதங்களாகவே கார் விற்பனையில் அதிகப்படியான வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்திய கார் தயாரிப்பாளர்களுக்கு இந்த 2022 ஜனவரி மாதம் சிறந்த மாதமாகவே அமைந்தது என்று கூறலாம். கடந்த மாத விற்பனைகளை விட இனி வரும் காலங்களில் மென்மேலும் விற்பனைகளை அதிகரிக்கும் வகையில் TATA மோட்டார்ஸ் நிறுவனம் அதன் கார்களுக்கு கிட்டத்தட்ட ரூ.60,000 வரை சிறந்த தள்ளுபடிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
Tata Harrier (ரூ. 60,000 வரை) : Tata Harrier என்பது இந்திய சந்தையில் டாடா வழங்கும் midsize SUV ஆகும். விற்பனையாகாத Tata Harrier-ன் 2021 மாடல் கார்களை வாங்குபவர்கள் ரூ. 60,000 வரை சலுகைகளைப் பெறலாம், மேலும் இதில் ரூ. 20,000 வரையிலான ரொக்கப் பலன்களை பெற்றுக்கொள்ளலாம். எக்ஸ்சேஞ் சலுகையின் மூலம், புதிய 2022 மாடல் கார்களுக்கு ரூ. 40,000 வரை மட்டுமே சலுகை கிடைக்கும். Dark Edition trimmings ரூ.20,000 வரையிலான போனஸுடன் கிடைக்கிறது.
Tata Safari (ரூ. 60,000 வரை) : Tata Safari என்பது ஆட்டோமேக்கரின் flagship SUV ஆகும். இதுவரை விற்பனையாகாத Tata Safari -ன் 2021 மாடல்களை இந்த ஆண்டு எக்ஸ்சேஞ் செய்துகொள்வதன் மூலம் ரூ.60,000 வரையிலான தள்ளுபடியுடன் பெற்றுக்கொள்ளலாம். அதே சமயம் புதிய 2022 மாடல்கள் ரூ.40,000 வரையிலான தள்ளுபடியுடன் எக்ஸ்சேஞ்ச் சலுகை வழங்கப்படுகின்றன. Top-of-the-line Gold edition மாடல்கள் எவ்வித சலுகையுடனும் வரவில்லை.
Tata Tiago (ரூ. 30,000 வரை) : TATAவின் ஹேட்ச்பேக்குகளில் (hatchback) Tata Tiagoவும் ஒன்றாகும், இவை CNG மாறுபாட்டையும் அதிக தள்ளுபடியுடன் கிடைக்கின்றன. CNG வெர்ஷன்கள் இப்போது ரூ. 10,000 வரை ரொக்க பரிசுகளை தருகின்றன. ஹேட்ச்பேக்கில் (hatchback) வாங்குபவர்கள் ரூ.5,000 வரை தள்ளுபடியில் பெறலாம்.
Tata Tigor (ரூ. 25,000 வரை) : Tata Tigor என்பது TATA வின் செடான் (sedan) ஆகும், இதனை 4-door cope மூலம் மற்றவற்றிலிருந்து எளிதாக வேறுபடுத்தி அறியலாம். சமீபத்தில் இது CNG ஆப்ஷனுடன் கார்களை அறிமுகப்படுத்தியது. இப்போது CNG வகையைத் தவிர வேறு வகைகளுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
Tata Nexon (ரூ 15,000 வரை) : Nexon டாடாவின் கார்களில் ஒன்று, இது அதன் தனித்துவமான மாடல்களால் பிரபலமானது. இதன் இன்ஜின் அமைப்பு வாங்குபவர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது Nexon டீசல் இன்ஜின் வகைகளுக்கு ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் வழங்குகிறது.