பலரும் எதிர்பார்த்த கங்குவா படத்தின் டீசர் குறித்த முக்கிய அப்டேட்!

Kanguva Teaser: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் டீசர் நாளை மாலை வெளியாக உள்ளது.

 

1 /5

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. இந்த படத்தின் மீது பலரும் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.  

2 /5

கிட்டத்தட்ட 10 மொழிகளில், 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் கங்குவா படம் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.  இது சூர்யாவின் 42வது படமாகும். .  

3 /5

மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் கங்குவா படத்தில் திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பாபி தியோல், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.  

4 /5

இந்நிலையில் கங்குவா படத்தின் டீசர் நாளை செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.  இதனால் சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.  

5 /5

கங்குவா படம் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை என்றும், பண்டைய தமிழ் கலாச்சாரம் பற்றி பேசும் படமாக இருக்கும் என்றும் சிறுத்தை சிவா முன்பு கூறி இருந்தார்.