சூரிய பெயர்ச்சி 2022: சிக்கலில் '5' ராசிக்காரர்கள்!

அக்டோபர் 2022 கிரக பெயர்ச்சிகள்: இந்த மாதத்தில் பல கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. ஜோதிட சாஸ்திரப்படி பல ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலனையும், பல ராசிக்காரர்களுக்கு பாதகமான பலனையும் உண்டாக்கும். 17 அக்டோபர் 2022 அன்று சூரிய பகவான் துலாம் ராசிக்குள் நுழைகிறார். சூரிய பகவான், புதன் தேவனுக்கு சொந்தமான கன்னி ராசியை விட்டு துலாம் ராசிக்குள் நுழைவார். சூரியபகவானின் இந்த பெயர்ச்சியினால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

1 /5

மேஷம்: தொழில் செய்பவர்களுக்கு பண நஷ்டம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். வீட்டிலிருந்தும் பிரச்சனைகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்படலாம். பணியிடத்திலும் சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேச்சில் கவனம் தேவை. இதனால், அனாவசிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

2 /5

மிதுன ராசிகளுக்கு சூரியபகவான் மூன்றாம் வீட்டின் அதிபதி. பெயர்ச்சி காலத்தின் போது, ​ மிதுன ராசிக்காரர்கள் பணியிடங்கள் தொடர்பான பயணங்களைத் தவிர்க்க வேண்டும், தவறினால் பண இழப்பு ஏற்படலாம். உடல்நலப் பிரச்சினைகளும் ஏற்படலாம். உங்கள் மீதான சிலரது கோபம் அதிகரிக்கலாம், அது உங்கள் இமேஜை பாதிக்கலாம்.

3 /5

கடக ராசிக்காரர்களுக்கு இரண்டாம் வீட்டின் அதிபதி சூரியபகவான். பணியிடத்தில் மற்றவர்களுடன் தகராறு ஏற்படலாம். குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க முடியாது. குடும்பத்திலும் தகராறும் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு பரிவர்த்தனையை மேற்கொள்ளும் போதும் கவனமாக இருங்கள், இல்லையெனில் பெரும் இழப்புகள் ஏற்படலாம். உடல்நலக் கோளாறுகளும் இருக்கலாம். எனவே உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

4 /5

கன்னி ராசிக்காரர்களுக்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதி சூரிய பகவான். செலவுகள் அதிகரிப்பதால் நிதி பிரச்சனைகள் வரலாம். விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு பணியையும் குறித்த நேரத்தில் முடிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.

5 /5

கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டின் அதிபதி சூரியபகவான். இந்நிலையில், பெயர்ச்சி காலத்தில், பணியிடத்தில் சாதகமற்ற சூழ்நிலை ஏற்படலாம். இதனால், பண இழப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடும். தனிப்பட்ட வாழ்க்கையிலும் சர்ச்சைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சில குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளும் ஏற்படலாம். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)