மார்ச் 15ஆம் தேதியன்று கோவாவில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் திருமணம் நடைபெற்றது.
டிவி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் திருமணம் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் சலசலக்க வைத்துள்ளது. கோவாவில் நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இவர்களின் திருமணம் தொடர்பாக பல வதந்திகளும் ஊகங்களும் முடிவுக்கு வந்தன. அவர்களின் திருமணத்தின் சில முக்கிய சடங்குகளின் புகைப்படத் தொகுப்பு இது.
Also Read | சஞ்சனாவுக்கு மூன்று முடிச்சிட்டு திருமண பந்தத்தில் இணைந்தார் Jasprit Bumrah
(All images from Antar-Agni, Aparajita Toor, Kunal Rawal, Anita Dongre)
ஜஸ்பிரீத் பும்ரா Antar Agni kurtaவில் அசத்தலான தோற்றத்தில் பிரமிக்க வைக்கிறார். ஆடை வடிவமைப்பாளர் அனாவிலா வடிவமைத்த மஞ்சள் நிற ஜம்தானி புடவை சஞ்சனா அணிந்துள்ளார்.
திருமணவிழாவில் புகைப்படங்களுக்கு மகிழ்ச்சியாக போஸ் கொடுக்கும் இந்த ஜோடி, 2018-19 பருவத்திற்கான பி.சி.சி.ஐ விருதுகளின் போது பிரபலமானார்கள்.
ஜஸ்பிரீத் பும்ரா வெள்ளி நிறமுடைய குணால் ராவல் குர்தா அணிந்திருந்தார், வடிவமைப்பாளர் மகேஷ் நோட்டாண்டஸ் செய்த அற்புதமான நகைகளை அணிந்திருந்தார் சஞ்சனா கணேசன்.
ஜஸ்பிரீத் பும்ரா ஒரு கரு நீல பந்தல்காவில் கருப்பு எம்பிராய்டரி செய்த ஆடையை அணிந்திருந்தார். மணமகள் சஞ்சனா கணேசன் ஊதா நிற லெஹங்கா அணிந்திருந்தார்.
ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் சஞ்சனா இருவரும் தங்கள் மெஹந்தி விழாவில் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துக் கொண்டனர்.. பும்ரா கிரீம் நிற உடையில் கலக்கினால், சஞ்சனா நியான் நிற லெஹங்காவில் அசத்தினார்.