என்னை இப்படி பயன்படுத்தினா சீக்கிரம் ஒல்லியாகலாம்! டிப்ஸ் கொடுக்கும் ஆயில் புல்லிங்

Oil Pulling With Coconut Oil: ஆயில் புல்லிங் சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10 நிமிடம் கொப்பளித்து விட்டு வாயை சுத்தம் செய்தால் போதும்.  

ஆயில் புல்லிங் என்பது ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சக்திவாய்ந்த ஆரோக்கிய வாழ்வுக்கான வழிமுறையாகும்.

1 /8

ஆயில் புல்லிங் நன்மைகள் வாயில் எண்ணெயை ஊற்றி 10 நிமிடங்கள் சுழற்றி கொப்பளிப்பது தான் ஆயில் புல்லிங். வெறும் பத்து நிமிடத்தில் பல சுகாதார நன்மைகளைக் கொடுக்கிறது ஆயில் புல்லிங். நமது உமிழ்நீரில் உள்ள நொதிகள் எண்ணெயுடன் தொடர்பு கொள்ளும்போது, ​​அவை உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளை சுத்தப்படுத்தும் என்று ஆரியவேதம் நம்புகிறது.

2 /8

உடல் எடையை குறைப்பதில் ஆயில் புல்லிங் நல்ல பலனைக் கொடுக்கிறது. தொப்புளில் எண்ணெய் வைப்பது பல்வேறு நன்மைகளை அள்ளித்தரும் என்றும் ஆயுர்வேதம் சொல்கிறது

3 /8

நல்ல ஈறு மற்றும் வாய் ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படும் ஆயில் புல்லிங், வாயில் எண்ணெயை எடுத்துக் கொண்டு வாயை கொப்பளிக்கும் ஒரு முறை ஆகும்

4 /8

தேங்காய் எண்ணெய் ஒரு சூப்பர்ஃபுட் ஆக விளங்குகிறது; பல வழிகளில் நமது ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு ஆயில் புல்லிங் செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

5 /8

காலையில் வெறும் வயிற்றில் ஆயில் புல்லிங் செய்யலாம். இதற்கு நல்லெண்ணெய் மிகவும் சிறந்தது.

6 /8

ஆயில் புல்லிங் உமிழ்நீரில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் மற்றும் வாயில் படிந்திருக்கும் வெண்மையான படிமத்தை கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இதனால் ஈறு ஆரோக்கியம் மேம்படும்.

7 /8

எண்ணெய் கொண்டு தினசரி 10 நிமிடம் கொப்பளிப்பதால், உடல் எடை குறைந்து, தோற்றப் பொலிவு மேம்படும்

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை