வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபட இவ்வளவு நியமங்களா? ஆலயம் தொழுவது சாலவும் நன்று!

Shivlinga Pooja At Home : வீட்டில் சிவலிங்கத்தை நிறுவ நினைத்தால், அதற்கு முன் இந்த விசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்... வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவது வாழ்வில் நல்லதும் கெட்டதுமாக பல விளைவுகளை ஏற்படுத்தும்...  
  

மகாசிவராத்திரி மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சிவபெருமானை வணங்குவதற்கு ஆலயங்களுக்கு செல்வது நன்று. ஆனால், சில பக்தி பெருக்கில் வீட்டிலும் சிவலிங்கத்தை வைத்து வழிபட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வீட்டில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய நினைப்பவர்கள், அதற்கான நியமங்களையும் பலனையும் தெரிந்துக் கொண்டு செய்வது நல்லது..

1 /7

வீட்டில் உள்ள பூஜையறையில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவது குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சிவலிங்கத்தை வீட்டில் வைக்கலாமா வேண்டாமா, அதன் விளைவுகள் என்ன என்பதை தெரிந்துக் கொண்டு, நியமங்களை கடைபிடிப்பவர்கள் மட்டுமே சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்

2 /7

மும்மூர்த்திகளில் சிவன் அழிக்கும் தெய்வம் என்பதால், பலருக்கும் சிவலிங்கத்தை வீட்டில் வைப்பது அச்சத்தைக் கொடுக்கும். ஆனால், சிவன் தீமைகளை அழிப்பவர், ஆணவத்தை வேரறுப்பவர் என்பதை புரிந்துக் கொள்ளவேண்டும். தவறுகளை அவர் தண்டிப்பார் என்பதால் சிவலிங்க பூஜையிலும் நியமங்களை சரியாக கடைபிடிக்க வேண்டும்

3 /7

முக்தியை அளிப்பவர் சிவன் என்பதால் சிவலிங்கத்தை வீட்டில் வைக்கக் கூடாது என்று சொல்வார்கள். சிவன் பற்றுகளை அறுப்பவர் என்பதால், குடும்பத்தில் உள்ளவர்களின் பற்றுகளை அறுப்பவர், இது ஞான மார்க்கத்துக்கு நல்லது என்றாலும், குடும்பத்திற்கு நல்லதா?  

4 /7

சிவலிங்கத்திற்குப் பதிலாக, சிவபரிவாரம் எனப்படும், சிவன் பார்வதி மற்றும் சிவ மைந்தர்கள் உள்ள படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாம்  

5 /7

துறவு வாழ்க்கை வாழ விரும்புபவர்கள் அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பாதவர்கள் சிவலிங்கத்தை வீட்டில் வைத்து பூஜை செய்யலாம்  

6 /7

ஆனால், சிவலிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவது தவறில்லை. நியமங்களை பின்பற்றி தினமும் பூஜை செய்பவர்கள், பூஜையறையில் வைத்து சிவனை வழிபடலாம்

7 /7

இந்த கட்டுரை இணையத்தில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. மத நம்பிக்கைகள் என்பது ஆளுக்கு ஆள், இடத்திற்கு இடம் மாறுபடுவது. இது பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை, இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது