ஆண்டின் முதல் சூரிய கிரகணம், இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

புதுடெல்லி: 2022ம் ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழவுள்ளன. இதில் 2 சூரிய கிரகணங்களும், 2 சந்திர கிரகணங்களும் ஆகும். இதில் முதல் கிரகணம் அடுத்த மாதம் ஏப்ரல் மாதம் நிகழ உள்ளது. இருப்பினும், இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும். ஆனால் ஜோதிடத்தின் பார்வையில் இந்த கிரகணம் மிகவும் முக்கியமானது. மேஷத்தில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தென்பட உள்ளது. தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகாவில் இந்த சூரிய கிரகணம் தெரியும்.

1 /5

இந்த பகுதி சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ஆம் தேதி நள்ளிரவு 12:15 மணிக்கு தொடங்கி மே 1 ஆம் தேதி அதிகாலை 04:07 வரை நீடிக்கும். மேஷ ராசியில் ஏற்படும் இந்த கிரகணத்தின் பலன் 12 ராசிகளிலும் இருக்கும், இவற்றில் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

2 /5

இந்த சூரிய கிரகணம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும். அவர்களின் நிதி நிலையில் வலுவான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. தடைபட்ட பணிகள் வேகமாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களும், வியாபாரிகளும் நன்மை அடைவார்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நேரம்.

3 /5

கடக ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 30-ம் தேதி சூரிய கிரகணம் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். வேலையில் வெற்றி கிடைக்கும், மரியாதை கூடும். திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கும், அதற்கான பலனையும் பெறுவார்கள் என்றே சொல்லலாம். பதவி உயர்வு இருக்கலாம்.

4 /5

இந்த சூரிய கிரகணம் துலாம் ராசிக்காரர்களின் தொழிலுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் பதவி உயர்வு மற்றும் சில பெரிய வாய்ப்புகளைப் பெறலாம். கூட்டுத்தொழில் செய்பவர்களும் ஆதாயம் பெறலாம். இலக்கைத் துரத்துபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

5 /5

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் சுப பலன் தரும். முன்னேற்றம் அடையலாம். குறிப்பாக அரசு வேலையில் இருப்பவர்கள் பெரிய பலன்களைப் பெறலாம். அதே நேரத்தில், தொழிலதிபர்கள் தங்கள் வியாபாரத்தை அதிகரிக்க புதிய திட்டத்தில் பணியாற்றலாம்.   (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)