உத்தரபிரதேசத்தில் பள்ளி ஒன்றில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டதாக வந்துள்ள செய்திகள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறது.
காசியில் இறந்தால் முக்தி நிச்சயம் என்ற நம்பிக்கை இருப்பது அனைவருக்கும் தெரியும். அந்த நகரத்தின் பள்ளி ஒன்றில் வகுப்பறையை சுத்தம் செய்யும் போது மனித எலும்புக்கூடு இருப்பது தெரியவந்தது. தகவல் தெரிந்த தடயவியல் குழுவினர் உடனடியாக கல்வி கற்பிக்கும் பள்ளிக்கு வந்து எலும்புக்கூட்டை எடுத்து வழக்கை பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
Also Read | பிரபல Cricket வீரர்களின் பிரபலமில்லாத உடன் பிறப்புக்கள் யார் தெரியுமா?
COVID-19 தொற்றுநோய்க்குப் பிறகு, உத்தரபிரதேசம் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கத் தொடங்கியுள்ளன. பள்ளியை திறப்பதற்கு முன்னதாக வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டபோது, ஆண் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட செய்தி வெளியானது. வாரணாசியில் உள்ள ஜே.பி. மேத்தா இன்டர் கல்லூரியில் (J.P. Mehta Inter College) இந்த சம்பவம் நடந்துள்ளது. புதன்கிழமையன்று இந்த பள்ளியின் வகுப்பறை திறக்கப்பட்டபோது, வகுப்பறையில் பெஞ்சின் அடியில் இருந்து ஒரு எலும்புக்கூடு மீட்கப்பட்டது.
கொரோனா நெருக்கடியின் போது ஜே.பி. மேத்தா இன்டர் கல்லூரி ஏழை எளிய மக்களை தங்க வைக்கும் இல்லமாக மாற்றப்பட்டது. தொற்றுநோய் காலத்தில் இங்கு தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பாலோர் ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வகுப்பறையில் எலும்புக்கூடு இருப்பது தெரிந்த உடனேயே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் நிலையத்தின் பொறுப்பாளராக இருந்த இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமார் சிங் சம்பவ இடத்திற்கு சென்றார். தடயவியல் குழுவும் அங்கு விசாரணை மேற்கொண்டுள்ளது. (Representational image courtesy: Reuters)
கொரோனா காலத்தில் பள்ளி வளாகத்தில் நிறைய புல் மற்றும் புதர்கள் வளர்ந்திருந்ததாக பள்ளியின் முதல்வர் டாக்டர் என்.கே.சிங் கூறினார். இதனால், வகுப்பறையை சுத்தம் செய்ய முடியவில்லை. சுத்தம் செய்தபோது, அங்கிருந்து எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. (Representational image courtesy: Reuters)
கிடைத்த எலும்புக்கூடு ஒரு ஆணுடையது என்று கூறிய காவல்துறை அதிகாரி, பிரேத பரிசோதனைக்கு முன்னர் இந்த விஷயத்தில் எதுவும் கூற முடியாது என்றும் கூறினார். தேவைப்பட்டால், மரபணு பரிசோதனையும் செய்யப்படும். தற்போது தடயவியல் குழு விசாரித்து வருகிறது. (Representational image courtesy: Reuters)