இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் மீது ரசிகர்கள் கொள்ளும் பாசத்தை வெறி என்றே சொல்லலாம். போட்டிகளில் விளையாடும் வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யார் என்றே தெரியாது. அவர்களின் சிறிய அறிமுகம் இது.
கிரிக்கெட்டில் கலக்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் இந்த கிரிக்கெட் வீரர்களைப் பற்றித் தெரியும். ஆனால் அவர்களின் சகோதரர்களைப் பற்றித் தெரியுமா? தெரிந்துக் கொள்ளுங்கள்… இவர்களைப் பற்றி நீங்கள் அரிதாகவே கேள்விப்பட்டிருக்கலாம்.
Also Read | சிறையில் விசாரணை அதிகாரிகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அரசியல் ஆர்வலர்
விகாஸ் கோஹ்லி இந்திய கேப்டன் விராட் கோலியின் மூத்த சகோதரர். விராட்டைப் போலவே, விகாஸ் கோஹ்லிக்கும் சிறு வயதில் இருந்து கிரிக்கெட் விளையாடுவதில் மிகுந்த விருப்பம் உண்டு. ஆனால், அவரால் கிரிக்கெட்டில் முன்னேற முடியவில்லை. விகாஸ் கோலி, தனது தம்பியும் பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலியின் தொழிலை கவனித்து வருகிறார். விராட்டின் அண்ணா, தொழிலதிபர். தொழில் வட்டாரங்களில் அவர் பிரபலமானவர். மனைவி சேத்னாவுடன் பாலிவுட் விருந்துகளில் அவர் கலந்துக் கொள்வார்.
இந்தியாவின் ஹிட்மேன் ரோஹித் ஷர்மாவின் தம்பி விஷால் சர்மா, தனது அண்ணனிடம் இருந்து விலகி இருக்கிறார். அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் ரோஹித் ஷர்மாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் கூட இல்லை.
இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் அண்ணன் பெயர் நரேந்திர சிங் தோனி. எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் கூட அண்ணனைப் பற்றி பெரிதாக குறிப்பிடப்படவில்லை. படிப்புக்காக மகேந்திர சிங் தோனியின் அண்ணன் வெளியில் இருப்பதாக திரைப்படத்தில் ஒரு இடத்தில் சொல்லப்படும். தோனி சகோதரர்களுக்கு இடையில் 10 வயது இடைவெளி இருக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்நாள் பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலியின் அண்ணனின் பெயர் சினேகாஷ் கங்குலி உள்ளார். மாநில அளவில் 10 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடிய சினோகாஷ் கங்குலி, இப்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (Bengal Cricket Association (CAB)) செயலாளராக உள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜோராவர் சிங் நடிப்ப்புத் துறையில் கால் பதிக்க முயற்சிக்கிறார். பிக் பாஸ் சீசன் 10 இல் தோன்றிய தனது மனைவி அகங்க்ஷா குர்கானிடமிருந்து பிரிந்தபோது அவர் நிறைய சிக்கல்களை எதிர்கொண்டார்.