ஒரே படத்தில் இணைந்து நடிக்கும் ராகவா லாரன்ஸ் - எஸ்ஜேசூர்யா - ஃபஹத் பாசில்!

லோகேஷ் கனகராஜ் எழுத்தில் பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பென்ஸ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

1 /6

நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் தங்களது நடிப்பு திறமைக்காக அறியப்பட்டவர்கள். தற்போது இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர்.    

2 /6

சிவகார்த்திகேயனை வைத்து ரெமோ மற்றும் கார்த்தியை வைத்து சுல்தான் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பாக்கியராஜ் தான் இந்த படத்தை இயக்க உள்ளார்.

3 /6

ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்திற்கு 'பென்ஸ்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.

4 /6

ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. கூடுதல் சிறப்பம்சமாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஃபஹத் பாசில் நடிக்கின்றனர்.

5 /6

கடந்த ஆண்டு ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தில் நடித்து இருந்தனர்.

6 /6

அதன் பிறகு நண்பர்களான இருவரும் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர். இவர்களுடன் ஃபஹத் பாசில் இணைந்து இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.