ரசிகர்களுடன் டாக்டர் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன்- புகைப்படங்கள்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் இன்று வெளியாகியுள்ளது. நேற்று இரவுவரை படம் வெளிவருமா என்பதில் சிக்கல் நீடித்தது. கடைசி நிமிடத்தில் பிரச்சனைகளை முடித்து, அதிகாலையில் படத்தை திரையிட வழி செய்தனர்.

அதன்படி நீண்ட வரிசையில் ரசிகர்கள் காத்திருந்து படத்தைப் பார்த்தனர்.சிவகார்த்திகேயனும், படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் சென்னை வெற்றி திரையரங்கில் படத்தைப் பார்த்தனர். அதிகாலை காட்சிக்கு வந்த இவர்கள் ரசிகர்களோடு அமர்ந்து படத்தைப் பார்த்து ரசித்தனர்.

இதற்கிடையில் டாக்டரின் முன்பதிவு திருப்தி தருவதாக பல திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

1 /5

2 /5

3 /5

4 /5

5 /5