சுகர் லெவல் கட்டுக்குள் இருக்க.. இந்த 4 விஷயங்களை கடைபிடிங்க போதும்.!!

இன்றைய டென்ஷன் மிகுந்த வாழ்க்கையின் பரிசாக சர்க்கரை நோய் இருப்பது என்பது கவலைக்குரிய விஷயம். இதனை முழுமையாக குணப்படுத்துவது முடியாது என்றாலும், கட்டுக்குள் வைப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியம். இதிலும் உணவில் அதிகபட்ச கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அறிவுறுத்துகின்றனர் சுகாதார நிபுணர்கள்.

1 /8

நாம் சாப்பிடும் உணவு  கார்போஹைட்ரேட்டாக உடைக்கப்பட்டு குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. பின்னர் இன்சுலின் என்ற ஹார்மோன் கணையத்திலிருந்து வெளியிடப்படும் நிலையில், உடலின் செல்கள் சர்க்கரையை உறிஞ்சி ஆற்றலை உற்பத்தி செய்கின்றன.

2 /8

ஆனால், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவதால், செல்கள் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை உறிஞ்ச முடியாமல், உடலில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாகும். 

3 /8

இருப்பினும்,  நீரிழிவு நோயாளிகளுக்கான  உணவிலிருந்து, வாழ்க்கை முறை வரை 4 எளிய விஷயங்களை பின்பற்றினால், சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கலாம். சர்க்கரை அளவை கட்டுக்குள் இல்லை என்றால் ஏற்படும் பல உடல் நல பிரச்சனைகளில் இருந்தும் உடலை பாதுக்காக்கலாம்.

4 /8

சிறுதானியங்கள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. அரிசி, கோதுமை  சாப்பிடுவதற்கு பதிலாக தினை, ராகி என்னும் கேழ்வரகு ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதால், சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

5 /8

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ஜீரணிக்க அட்ஜிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், அதனை அதிகம் டயட்டில் சேர்த்துக்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று பல ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகின்றன.

6 /8

இலவங்கப்பட்டைக்கு இன்சுலின் சுரப்பை இயற்கையாக அதிகரிக்கும் ஆற்றல் உள்ளது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக, வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து,  பசியை கட்டுப்படுத்தும். எனவே, ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இலவங்கப்பட்டை மூலிகை தேநீர் குடிக்கவும்.  

7 /8

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த எந்த வகையான உணவு உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதை அறிய உங்கள் இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்கவும். இந்த முறை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.