STR48: சிம்பு - தேசிங்கு பெரியசாமி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ!

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள 'எஸ்டிஆர் 48' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

 

1 /5

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் சிலம்பரசன் 'எஸ்டிஆர் 48' படத்தில் நடிக்கிறார். இது சிம்புவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படமாகும்.

2 /5

‘எஸ்டிஆர் 48’ படத்தில் சிம்பு வித்தியாசமான போர்வீரன் கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும், இதற்காக சிறப்பு பயிற்சி பெற அவர் லண்டன் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.  

3 /5

பிரிட்டனில் நடிகர் சிம்பு ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியிருந்து பயிற்சி பெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பயிற்சி முடிந்தவுடன் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அவர் வீடு திரும்பியவுடன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 /5

‘எஸ்டிஆர் 48’ படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகையை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது

5 /5

மேலும் ‘எஸ்டிஆர் 48’ படத்தில் அனிரூத் இசையமைக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அனிரூத், சிம்புவுடன் இணைந்து முதன்முறையாக பணியாற்றும் படம் இதுவாகும்.