Simbu: சிறுவயதில் செம க்யூட்டாக இருக்கும் சிம்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..

Silambarasan Childhood Photos: நடிகர் சிலம்பரசனுக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து அவரது சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. 

Silambarasan Childhood Photos: டி.ராஜேந்தரின் மகன் சிலம்பரசனுக்கு இன்று 41வது பிறந்தநாள். இதுவரை 48 படங்களுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

1 /8

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் சிலம்பரசன். டி.ராஜேந்தரின் மகனான இவர், சிறுவயது முதலே நடித்து வருகிறார். 

2 /8

1983ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு தற்போது 41வயது ஆகிறது.  இன்று இவர் பிறந்தநாள் கொண்டாடுவதை ஒட்டி, பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

3 /8

சிம்பு, 1 வயது முதலே படங்களில் நடித்து வருகிறார். சிலம்பரசனுக்கு குரலசரன் என்ற தம்பியும் இலக்கியா என்ற தங்கையும் உள்ளனர். 

4 /8

சிம்புவின் 48வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது. 

5 /8

பல ஹிட் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள சிம்பு, சினிமாவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிரேக் எடுத்தார். அப்போது அதிக எடையுடன் காணப்பட்டார். 

6 /8

7 /8

மீண்டும் சினிமாவிற்குள் கம்-பேக் கொடுத்த அவர், உடல் எடையை குறைத்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 

8 /8

சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரது சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.