உங்கள் பிறப்புறுப்பை சோப்பு கொண்டு சுத்தம் செய்தால் இவ்வளவு பாதிப்பா?

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலரும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க பிறப்புறுப்பை சுத்தமாக வைத்து கொள்வது அவசியம். இல்லையென்றால் பல்வேறு தீங்குகளை ஏற்படுத்தும்.
1 /6

அனைவரும் தங்களது பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். பலரும் குளிக்கும் போது சோப்பை  பயன்படுத்தி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதனால் ஏற்படும் ஆபத்துக்களை தெரிந்து கொள்ளுங்கள்.       

2 /6

உங்கள் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய சோப்பை பயன்படுத்தும் போது அதில் உள்ள pH அளவு நல்ல பாக்டீரியாவை வெளியேற்றி, கெட்ட பாக்டீரியாக்களை வளர அனுமதிக்கிறது. இது பின்னாளில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.  

3 /6

தொடர்ந்து சோப்பு பயத்தினால் ஈஸ்ட் தொற்று, பாக்டீரியா, அரிப்பு போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் சோப்பில் உள்ள ரசாயனங்கள் வீக்கத்தை ஏற்படுத்தும்.  

4 /6

பிறப்புறுப்பில் சோப்பு பயன்படுத்தும் போது அது, இயற்கையான ஈரப்பதத்தை நீக்கி வறட்சி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் சோப்பு அதிக துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம்.  

5 /6

பெண்கள் பிறப்புறுப்பில் சோப்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அவற்றில் உள்ள ரசாயனங்களால் ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படலாம்.  

6 /6

சோப்பை பயன்படுத்துவது உடலுறவின் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒருசிலருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.