Senior Citizens - விரைவில் மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு நற்செய்தியை வழங்க வாய்ப்புள்ளது.
Senior Citizens - விரைவில் மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கு நற்செய்தியை வழங்க வாய்ப்புள்ளது. ஆம், மூத்த குடிமக்களுக்கான (Senior Citizens) சிறப்புத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்த உள்ளது. இதை அரசாங்கம் அறிவித்தால், நீங்களும் 70 வயதில் ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுவீர்கள். வயதான காலத்தில் கூட பணத்தின் கவலையிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள் என்பதே இதன் பொருளாகும்.
ALSO READ | 7th Pay Commission: OPS, NPS ஓய்வீதியத் திட்டத்தில் அரசு அளித்த மிகப்பெரிய நிவாரணம்
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
1. என்ன திட்டம்? - ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஒரு முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கோரியுள்ளது. NPS கணக்கைத் தொடங்க அதிகபட்ச வயது வரம்பை 65 முதல் 70 ஆக உயர்த்த திட்டமிட PFRDA கோரியுள்ளது.
2. PFRDA திட்டம் என்ன? - இது குறித்து PFRDA தலைவர் Supratim Bandyopadhyay கூறுகையில், கடந்த 3.5 ஆண்டுகளில், 60 வயதுக்கு மேற்பட்ட சுமார் 15,000 க்கும் மேற்பட்டவர்கள் தேசிய ஓய்வூதிய முறையில் (NPS) ஒரு கணக்கைத் திறந்துள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தில் சேர முந்தைய 60 வயது அதிகபட்ச வயது வரம்பை 15 ஆண்டுகளாக உயர்த்த முன்மொழியப்பட்டது என்றார்.
3. NPSஸில் ஓய்வூதியம் பெற வயது என்ன? - NPS திட்டம் என்பது 60 ஆண்டு ஓய்வூதிய நிதியை (Pension Fund) அடிப்படையாகக் கொண்ட ஓய்வூதிய நிதியாகும். மறுபுறம், APY திட்டத்தில், ஓய்வூதியம் ரூ .1000 முதல் 5000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நீங்கள் நிரப்பும் பணத்தின் அடிப்படையில் உங்கள் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படும் என்பதே இதன் பொருள்.