இன்னும் 7 நாட்களில் உதயமாகும் சனி.. இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்

Shani Uday Effect On Zodiac Sign: ஜோதிடத்தின் படி, மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் சனி உதயமாகப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சுப பலன் உண்டாகும்.

ஜோதிட சாஸ்திரப்படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றும். நீதிக்கடவுளான சனி இன்னும் 7 நாட்களில் அதாவது மார்ச் 18ம் தேதி காலை 7.49 மணிக்கு கும்ப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்கள் கிடைக்கும், மேலும் இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். சனியின் உதயத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

1 /5

மேஷ ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் நன்மை பலன் கிடைக்கும். தொழில், முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் வலுப்பெறும். கல்வியில் மகிழ்ச்சியான முடிவுகளைப் பெறுவீர்கள். புதிய வருமானம் வரும். தேர்வில் வெற்றி பெறலாம்.  

2 /5

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படலாம். வருமானம் உயரலாம். செல்வம் பெருகும். புதிய வேலை வாய்ப்பை பெறலாம். பணத்தை சேமிக்க முடியும்.  

3 /5

துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார நிலை மேம்படும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உருவாகும்.  

4 /5

தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் உதயத்தால் சாதகமான பலன் கிடைக்கும். பணியில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். வியாபாரத்தில் பொருளாதார நிலை மேம்படும். செல்வம் பெருகும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் பெறலாம். தொழிலில் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள்.

5 /5

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.