SBI முக்கிய செய்தி: வீட்டிலிருந்தே புதிய ATM Card-ஐ எளிதாக பெறலாம், விவரம் இதோ!!

SBI News Update: கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், வங்கிகள் தங்களது பெரும்பாலான சேவைகளை ஆன்லைனில் அளித்து வருகின்றன. 

நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு 'டோர் ஸ்டெப் வங்கி வசதி' மற்றும் ஆன்லைன் வங்கி வசதிகளையும் அதிகரித்துள்ளது.

1 /5

நீங்கள் SBI வாடிக்கையாளராக இருந்தால், வீட்டில் அமைர்ந்தபடியே பல வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் ஏடிஎம் கார்ட் தொலைந்துவிட்டாலோ, காலாவதியாகி விட்டாலோ அல்லது சேதமடைந்தாலோ, அதை சரி செய்ய நீங்கள் வங்கி கிளைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. புதிய ஏடிஎம் கார்டுக்கு நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க முடியும்.

2 /5

மிகவும் எளிமையான செயல்முறையிலேயே புதிய ஏடிஎம் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும். இதை எப்படி செய்வது என கீழே காணலாம். உங்கள் மொபைல் எண் உங்கள் வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வெண்டும். ஏனெனில் இந்த செயல்முறையை செய்து முடிக்க உங்கள் மொபைலில் OTP அனுப்பப்படும். 

3 /5

- முதலில் நீங்கள் இணைய வங்கி மூலம் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் லாக்-இன் செய்ய வேண்டும் - இதற்குப் பிறகு e-Services என்ற ஆப்ஷனில் செல்ல வேண்டும்.  - பின்னர் ATM Card Services என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும் - இதற்குப் பிறகு, Request ATM/Debit Card என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். - உங்கள் முன்னால் OTP அடிப்படையிலான மற்றும் ப்ரொஃபைல் பாஸ்வர்ட் அடிப்படையிலான என்ற இரண்டு ஆப்ஷன்களைப் பெறுவீர்கள்.  நீங்கள் OTP விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்

4 /5

- ஒரு புதிய பக்கம் இப்போது திறக்கும். இதில் கணக்கு தேர்வுக்குப் பிறகு நீங்கள் அட்டை பெயர் மற்றும் அட்டை வகையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் - அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்த பிறகு, அதை சரிபார்த்து சமர்ப்பிக்கவும். - சமர்ப்பித்த பிறகு உங்கள் டெபிட் கார்டு 7-8 வேலை நாட்களில் உங்களுக்கு வழங்கப்படும் என்ற செய்தி உங்களுக்குக் கிடைக்கும் - இந்த டெபிட் கார்டு நீங்கள் வங்கியில் பதிவு செய்த அதே முகவரியில் வரும். - நீங்கள் ஏடிஎம் கார்டை வேறு எந்த முகவரியிலும் பெற விரும்பினால், இதை நீங்கள் SBI கிளைக்கு சென்று தெரியப்படுத்த வேண்டும். 

5 /5

இதேபோல், SBI தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைனில் கணக்கில் புதிய மொபைல் எண்ணைப் புதுப்பிப்பதற்கான வசதியையும் செய்துள்ளது. நிகர வங்கி மூலமாகவும் இந்த பணியை செய்து முடிக்கலாம்.  - My Account & Profile என்ற ஆப்ஷனில் சென்று Profile என்பதைத் தேர்ந்தெடுக்கவும் - திறக்கும் புதிய பக்கத்தின் மேலே உள்ள Personal Details/Mobile என்ற ஆப்ஷனில் கிளிக் செய்ய வேண்டும். ப்ரொஃபைல் பாஸ்வர்ட் உள்ளிட்டு தொடரவும்.  - புதிய பக்கத்தில், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டிருக்கும். மேலும் இவற்றை மாற்றுவதற்கான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கும்.  - மொபைல் எண்ணுக்கான அப்ஷனை தேர்வு செய்து OTP செயல்முறைக்குப் பிறகு உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்கலாம்.