சனிப்பெயர்ச்சி பலன் 2023: கும்ப ராசியில் சனி பார்வை உதயம், யாருக்கு பாதிப்பு

கும்ப ராசியில் அஸ்தமனமாகியிருந்த சனி பகவான் மீண்டும் உதயமாகியுள்ளார். கும்ப ராசியில் இருந்து சனிபகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. சனி பகவானின் பயணம் பார்வை படும் ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

 

1 /8

மேஷ ராசி பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். உங்களின் தொழில் வளர்ச்சி மளமளவென அதிகரிக்கும். பண வருமானமும் பொருளாதார நிலையும் திருப்திகரமாக இருக்கும். பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும்.

2 /8

ரிஷப ராசி இலக்குகளை அடைய நிறைய போராட வேண்டும். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவானால் சில சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் பொறுமை அவசியம். அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. வாகன பயணங்களிலும் நிதானமும் கவனமும் தேவை. பண பரிவர்த்தனைகளில் கவனம் தேவை.  

3 /8

மிதுன ராசி சனி பெயர்ச்சி உங்களுக்கு அற்புதங்களை நிகழ்த்தப்போகிறது. வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும்.

4 /8

கன்னி ராசி புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். வீடு கட்ட வண்டி வாகனம் வாங்க கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும் அதை சுப செலவுகளாக மாற்றுங்கள்.  

5 /8

விருச்சிக ராசி வேலை செய்யும் இடத்தில் கவனமும் நிதானமும் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க சனிக்கிழமை அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது.

6 /8

மகர ராசி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடியால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. புது வேலைக்கு முயற்சி செய்யலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமும் நிதானமும் தேவை.  

7 /8

கும்ப ராசி சிலருக்கு மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். சிலர் புதிய தொழில் தொடங்குவீர்கள். திருமணம் சுப காரியம் கைகூடி வரப்போகிறது. நல்ல வரன் அமையும். திருமணத்திற்காக அதிக கடன் வாங்கி சிக்கலில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.

8 /8

மீன ராசி விரைய செலவுகளை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.