Shani Worship On Saturday : சனிபகவானுக்குரிய சனிக்கிழமை நாளில் செய்யும் வழிபாடு நன்மைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். ஏழரை சனி, அஷ்டமசனி, கண்டசனி என பல்வேறு சனி பாதிப்புகளையும் போக்கும் சனி வழிபாடு...
மகரம், கும்பம், மீனம், கடகம், விருச்சிகம், சிம்மம் என 12 ராசிகள் அனைவருமே இந்த சனி பரிகாரங்களை செய்து, கெட்ட காலத்தையும் பொற்காலமாக மாற்றிக் கொள்ளலாம்.
வாரத்தில் ஆறாவது நாளாக வரும் சனிக்கிழமை சனீஸ்வரருக்கு உரியது என்றாலும், அவரைத் தவிர, பெருமாள், ஆஞ்சநேயர் என பிற கடவுள்களையும் சனிக்கிழமைகளில் வழிபட வேண்டும். ஆனால், சனிக்கிழமை என்ற பெயரே சனீஸ்வரருக்கு உரிய நாள் என்பதால் தான் ஈஸ்வர பட்டம் பெற்ற கிரகத்தின் பெயரிலேயே இந்த கிழமை அமைந்துள்ளது
நவகிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர். ஈஸ்வரருக்கு சமமாக கருதப்படும் சனீஸ்வர பகவான், நவகிரக நாயகர் ஈஸ்வரனுக்குக் கட்டுப்பட்டவர். எனவே, சனிக்கிழமையன்று சிவ வழிபாடு செய்வது சனியின் அருளையும் பெற்றுத்தரும்
சிவ வழிபாடு சனீஸ்வரரின் அருளைப் பெற்றுத்தரும் என்றாலும், சனீஸ்வரரை அஷ்டோத்திரம் சொல்லி வழிபடுவதும் அர்ச்சனை செய்வதும் தீய பலன்களை குறைத்து தரும்
சனீஸ்வரரின் நேர்பார்வையில் இருப்பவர்கள், அதாவது சனி இருக்கும் இடத்தில் இருந்து அவரது நேர் பார்வையில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள், சனீஸ்வரருக்கு கண்மலர் வாங்கி சாற்றி சனிக்கிழமைகளில் வழிபாடு செய்வது, சனியின் கோபமான பார்வையை கருணை மிக்கதாக மாற்றிவிடும்
சனிக் கிழமைகளில், தயிர் சாதத்தில் சிறிதளவு கருப்பு எள் சேர்த்து தயிர்-எள்-சாதமாக காகத்திற்கு படைப்பது சனி தோஷத்தை நீக்கி பொற்காலத்தைக் கொண்டு வரும்
சிறிய துண்டு கருப்பு துணியில், ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வைத்துக் கொண்டு, சிறிதளவு கல்லுப்பு வைத்து, துணியை மூட்டையைப் போல் கருப்பு நூல் கொண்டு கட்டிக் கொண்டு, கிழக்கு திசையை பார்த்தவாறு நின்று, தலையை ஏழு முறை சுற்றி திருஷ்டி கழித்தால், சனியின் பார்வை கனிவானதாக மாறும்
21 சனிக்கிழமைகள் தொடர்ந்து சனீஸ்வரரை வழிபட்டுவந்தால், வாழ்க்கையில் நன்மைகள் மட்டுமே வந்து சேரும், தீமைகளை சனிபகவான் தீப்போல பொசுக்கிவிடுவார்
சனிக்கிழமையன்று சனீஸ்வரருக்கு செய்யும் எந்த பரிகாரமாக இருந்தாலும், அதனை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் செய்வது நல்ல பலன்களைத் தரும்
பொறுப்புத்துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது