சனி - செவ்வாய் உருவாக்கும் சமசப்தக யோகம்! ‘சில’ ராசிகளின் போதாத காலம் ஆரம்பம்!

செவ்வாய் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ளார். சனி பகவான் கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். இந்நிலையில், சனி மற்றும் செவ்வாய் நேருக்கு நேர் வருகின்றனர்.

ஜோதிடத்தின் கிரகங்களின் பெயர்ச்சி மட்டுமல்ல, கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றமும், அதனால் ஏற்படும் யோகங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1 /10

கர்மத்திற்கு ஏற்ப பலனை கொடுக்கும் நீதி பகவானான சனி பகவான் கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளா நிலையில் தற்போது சனி பகவான் வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

2 /10

தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் ஜூலை 01 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் சனி மற்றும் செவ்வாயின் நிலையால் சமசப்தம யோகம் உருவாகிறது.  

3 /10

சனி மற்றும் செவ்வாய் நேருக்கு நேர் இருக்கும் போது உருவாகும் சமசப்தக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

4 /10

கடக ராசியினருக்கு முக்கிய வேலைகளில் தடங்கல் உண்டாகலாம்.  உடல்நலக் குறைபாடு ஏற்படலாம். தவறான முடிவினால் பொருளாதார இழப்பு ஏற்படக் கூடும். உறவுகளிடம் கருத்து வேறுபாடு காரணமாக கவுரவம் பாதிக்கப்படலாம்.

5 /10

சிம்ம ராசிக்காரர்கள், வேலையில் சில தடைகளை சந்திக்க கூடும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளை சந்திக்க நேரிடும். உங்கள் உடல் நலம் பேணுதல், வீட்டை பழுது பார்த்தல் போன்ற விஷயங்களுக்கு அதிக செலவு செய்ய வாய்ப்புள்ளது.

6 /10

கன்னி ராசியினருக்கு அதிக செலவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கடன் வாங்கும் சூழல் உருவாகலாம். மேலும் உறவினர்கள், நண்பர்களுடன் கருத்து வேறுபாடு, உறவில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.

7 /10

விருச்சிக ராசிகளுக்கு நிதி ஆதாயம் சிறப்பாக இருந்தாலும், செலவு அதிகமாக இருக்கும். அதனால் மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய உறவுகள் உருவாகும் என்றாலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வேலையில் பணியிட மாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. 

8 /10

தனுசு ராசியினருக்கு முக்கிய வேலைகளில் சில தடைகள் உருவாக வாய்ப்புள்ளதால் மன உளைச்சல் ஏற்படலாம். உறவுகளில் இறுக்கம் ஏற்படலாம். குறுகிய அல்லது நீண்ட பயணங்களால் சோர்வு ஏற்படும். 

9 /10

மகர ராசியினருக்கு வேலையில் சில தடைகளால் விரக்தியான மன நிலை உண்டாகும். குடும்பத்தில் சச்சரவுகள், உடல் நலக் குறைவு போன்ற விஷயங்கள் மனதை பாதிக்கும். கோபம் உங்கள் உங்கள் உடல் நலனை மட்டுமல்ல முன்னேற்றத்தையும் பாதிக்கும்.

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது