Beauty Cows Of Russia: மாடுகளுக்கான அழகுப் போட்டியில் பட்டம் வென்ற அழகிய மாடு

Beauty Cows Of Russia: ரஷ்யாவில் மாடுகளின் அழகுக்காக ஒரு தனித்துவமான போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. இப்போட்டியில் மக்கள் தங்கள் மாடுகளை அலங்கரித்து வெகு தொலைவில் இருந்தும் அழைத்துக் கொண்டு வந்தனர்.

பசுக்களுக்கு வண்ணமயமான ஆடைகள் மற்றும் தொப்பிகள் அணிவிக்கப்பட்டிருந்தன. 40 லிட்டர் பால் கொடுத்த அழகிய பசு பட்டத்தை வென்றது. 24 போட்டியாளர்களை வீழ்த்தி பட்டத்தை வென்ற இது கலப்பு இன மாட்டின் பெயர் மிச்சியே...

1 /5

மாடுகளின் அழகுப் போட்டி, ரஷ்யாவின் யகுஷியா பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டது  போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் பெயரும் தனித்தன்மை வாய்ந்தது. மிச்சியே என்றால் புன்னகை என்று பொருள். இப்போட்டியில் வெற்றி பெற்ற மாட்டை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

2 /5

ரஷ்யாவில் ஏற்பாடு செய்யப்பட்ட அழகு போட்டியில் வெற்றி பெற்ற மிச்சியே என்ற மாடு, 24 போட்டியாளர்களை தோற்கடித்தது. மாட்டின் முதுகில் மஞ்சள் மற்றும் பச்சை வண்ன ஆடைகள் அணிவிக்கப்பட்டு, தலையில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது 

3 /5

இந்த தனித்துவமான போட்டியில் வெற்றி பெற்ற மாடு யாகுட் மற்றும் ஹியர்ஃபோர்ட் இனங்களில் இருந்து உருவாக்கப்பட்ட கலவை இனத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. யகுஷியாவின் சியாமய்கி கிராமத்தை சேர்ந்த மாடு இது

4 /5

ரஷ்யாவில் நடைபெற்ற இந்த வித்தியாசமான போட்டியில் வெற்றி பெற்ற பசு மிச்சியே தினமும் 40 லிட்டர் பால் கொடுக்கிறது. போட்டி கடுமையாக இருந்ததாகவும், ஆனால் தனது வளர்ப்பு மாடு பலத்த போட்டிக்கு இடையில் வெற்றி பெற்றதாகவும் மாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

5 /5

இந்த போட்டியில் கடந்த ஆண்டு 2 மாடுகள் வெற்றி பெற்றன. பயகா கிராமத்தை சேர்ந்த இரட்டை காளைகளான ஊட்டி மற்றும் டூடோய் முதலிடத்தை பிடித்தன.