ஆர்சிபி கப் அடிக்க... அடுத்த வருஷம் இந்த 5 வீரர்களை கண்டிப்பாக கழட்டிவிடனும் - யார் யார் தெரியுமா?

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து இதில் விரிவாக காணலாம். 

  • May 23, 2024, 18:41 PM IST

ஐபிஎல் மெகா ஏலம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நடக்கும். இதை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை தக்கவைக்கும். 

 

 

1 /9

ஒரு ஐபிஎல் அணியே எப்போதும் வலுவாக இருந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அனைவருக்கும் அனைத்துவிதமான வீரர்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.   

2 /9

ஐபிஎல் மெகா ஏலம் கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெற்றது. அதில் ஒரு அணி மொத்தம் 4 வீரர்களை தக்கவைக்கலாம். குறிப்பாக மூன்று இந்திய வீரர்களுக்கு மேலோ அல்லது 2 வெளிநாட்டு வீரர்களுக்கு மேலோ தக்கவைக்க முடியாது.   

3 /9

அதாவது அதிகபட்சமாக இந்திய வீரர்கள் என்றால் மூன்று பேரையும், வெளிநாட்டு வீரர்கள் என்றால் இரண்டு பேரையும் தக்கவைக்கலாம். அதுவே இந்த முறையும் பின்பற்றப்படுமா என தெரியவில்லை. இந்த விதிகளில் மாற்றம் வரவும் வாய்ப்புள்ளது.   

4 /9

அந்த வகையில் 2025 ஐபிஎல் தொடருக்கு முன் நடைபெறும் மெகா ஏலத்தை முன்னிட்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விடுவிக்க வாய்ப்புள்ள 5 வீரர்கள் குறித்து இதில் காணலாம்.   

5 /9

மேக்ஸ்வெல்: வில் ஜாக்ஸ் இருக்கும் இடத்தில் மேக்ஸ்வெலுக்கு நிச்சயம் வேலை இருக்காது. எனவே, மேக்ஸ்வெல்லை தக்கவைக்க வாய்ப்பில்லை.  

6 /9

கேம்ரூன் கிரீன்: இந்தாண்டு ஆர்சிபி அணிக்கு கிரீன் சிறப்பாக விளையாடினாலும் அவரை அதிக தொகைக்கு தக்கவைக்க இயலாது. எனவே, இவரையும் நிச்சயம் ஆர்சிபி விடுவிக்கும்.   

7 /9

மயங்க் தாகர்: ஷாபாஸ் அகமதுக்கு பதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்து 1.8 கோடி ரூபாய்க்கு இவரை வாங்கியது. எனவே இவரை ஆர்சிபி தக்கவைக்க வாய்ப்பே இல்லை  

8 /9

அல்ஸாரி ஜோசப்: வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர் என்ற ரீதியில் இவரை மிகவும் நம்பி 11.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது.இருப்பினும் இவரை எடுத்தது ஆர்சிபிக்கு பெரிய ஏமாற்றம்தான். எனவே இவரை தக்கவைக்க வாய்ப்பில்லை.   

9 /9

ரீஸ் டோப்ளி: இவரும் அல்ஸாரி ஜோசப் போல்தான். இவரை ஆர்சிபி 1.9 கோடி ரூபாய்க்கு எடுத்தது.ஆனாலும் இவர் பெரிதாக கைக்கொடுக்கவில்லை. எனவே இவரையும் ஆர்சிபி தக்கவைக்க வாய்ப்பில்லை.