ஜெர்மனில் 7 வயது பையனுக்காக பள்ளிக்குச் செல்லும் ரோபோ, மாணவனின் படிப்புக்கு உதவி செய்கிறது: இது எதிர்காலக் கனவு அல்ல, தற்போது நடந்துவரும் உண்மை நிகழ்வு...
Photos Courtesy: (Reuters)
பள்ளிக்கு செல்ல, செயற்கை நுண்ணறிவு (AI) பொருத்தப்பட்ட ரோபோவின் தேவைக்கான தளங்கள் விரிவடைந்து வருகின்றன. அது என்ன என்று தெரிந்துக் கொள்ளுங்கள். 7 வயது குழந்தை ஜோசுவா மார்டினாஞ்செலி (Joshua Martinangeli), தனது நோய் காரணமாக பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக ரோபோ மாணவராக அவதாரம் எடுத்துள்ளது.
ஜோசுவா என்ற ஜெர்மன் சிறுவன் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். கழுத்தில் குழாய் பொருத்தப்பட்டுள்ளதால், நேரடியாக பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. எனவே, அவனுக்குப் பதிலாக, ரோபோ பள்ளிக்கு செல்கிறது. ஜோசுவா நேரடியாக வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் போனாலும், அவரது படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெர்லின் உள்ளூர் அமைப்பு இந்த ரோபோவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த புதிய முயற்சிக்குத் தேவையான செலவுகளுக்கு நகரத்தின் உள்ளூர் கவுன்சில் பணம் செலுத்துகிறது.
'இந்த திட்டம் தனித்துவமானது. எங்கள் பள்ளிகளுக்கு 4 ரோபோக்களை வாங்கியுள்ளோம். கொரோனா தொற்றுநோய்களின் போது இந்த யோசனை எங்களுக்கு வந்தது. இதைச் செய்வதன் மூலம் சில ஏழைக் குழந்தைகள் சமூகக் கற்றலில் இருந்து கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்' என்று பெர்லின் கல்வி ஆலோசகர் டார்ஸ்டன் குஹேனே தெரிவிக்கிறார்.
ஜோஷ்வா மிகவும் புத்திசாலி மாணவன் என்று அவரது ஆசிரியர்கள் கூறுகிறார்கள். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வகுப்புக்கு வரமுடியாவிட்டாலும் படிப்பில் முதலிடத்தில் இருக்கிறார்.
ஜோஷ்வா விரைவில் குணமடைய வகுப்பு தோழர்கள் வாழ்த்துகின்றனர். ஜோஷ்வா வகுப்பில் கலந்துகொண்டு தங்களுடன் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக சக மாணவர்கள் கூறுகின்றனர்.