ரிஷப் பந்த் லெஜண்டா? அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்த ஹேட்டர்ஸ்

Rishabh Pant : ரிஷப் பந்தை இந்திய அணிக்காக விளையாடிய இடது கை லெஜண்ட்ஸ் பிளேயிங் லெவனில் சேர்த்ததற்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

Rishabh Pant : அண்மையில் இடதுகை பழக்கமுடையவர்களின் நாள் கொண்டாடப்பட்ட நிலையில், இந்திய அணிக்காக விளையாடிய இடதுகை வீரர்களைக் கொண்ட பிளேயிங் லெவனை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

 

1 /6

அந்த அணியில், கவுதம் கம்பீர், ஷிகர் தவான், சவுரவ் கங்குலி, யுவ்ராஜ் சிங், ரிஷப் பந்த், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, இர்பான் பதான், குல்தீப் யாதவ், ஆஷிஸ் நெஹ்ரா, ஜாகீர்கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.  

2 /6

இந்த லெவன் தான் ரசிகர்களை கடுப்பேற்றியுள்ளது. குறிப்பாக ரிஷப் பந்தெல்லாம் லெஜண்டா? என கேள்வி எழுப்பியிருக்கும் ரசிகர்கள் அவரை ஏன் இந்த லெவனில் சேர்த்தீர்கள் என்றும் ஆவேசமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

3 /6

ரிஷப் பந்த் இந்திய அணிக்காக 70க்கும் மேற்பட்ட டி20 போட்டிகளை ஆடியிருக்கும்போது வெறும் 21 சராசரி மற்றும் 120 ஸ்டைக்ரேட் மட்டுமே வைத்திருக்கிறார். இவரை ஒப்பிடும்போது யுவ்ராஜ் சிங்கூட இந்திய அணிக்காக குறைவான போட்டிகளே ஆடியிருக்கிறார்.  

4 /6

அவரை விட ரிஷப் பந்த் என்ன சாதித்துவிட்டார்? அவருக்கு ஏன் இத்தனை வாய்ப்புகளை கொடுக்கிறீர்கள்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், இப்போது இந்த பிளேயிங் லெவன் வெளியாகியிருக்கிறது.   

5 /6

இது ரிஷப் பந்த் ஹேட்டர்ஸை இன்னும் கடுப்பேற்றியுள்ளது. சஞ்சு சாம்சன் போன்ற பிளேயர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், பேவரிட்டிசம் பெயரில் ரிஷப் பந்துக்கு இடம் கொடுத்து அவரை லெஜண்ட் ரேஞ்சுக்கு பேசுவதெல்லாம் அநியாயம் என்றும் வன்மத்தை ரசிகர்கள் கொட்டியுள்ளனர்.  

6 /6

இந்திய அணிக்காக விளையாடிய இடது கை பழக்கமுடையவர்களின் லெவனில் சேர்க்க ஆள் இல்லாமல் ரிஷப் பந்தை, அந்த லெவனில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேர்த்திருக்கிறது என்றும் விமர்சித்துள்ளனர்.