மகாலட்சுமியின் ஆசீர்வாதம் வேண்டுமா? இந்த பொருட்களை தூரப் போடுங்க!

Blessing Of Goddess Lakshmi: செல்வத்திருமகளின் அருளாசி இருந்தால் எந்நாளும் நன்னாள் தான்... அன்னையின் அருள் பெற இந்த வழிகளை கடைபிடிக்கவும்

செல்வத்திருமகளின் அருளாசி இருந்தால் எந்நாளும் நன்னாள் தான்... அன்னையின் அருள் பெற இந்த வழிகளை கடைபிடிக்கவும்...

மேலும் படிக்க | நவராத்திரி கொண்டாட்டங்களுடன் முடிவுக்கு வந்த திருப்பதி ஏழுமலையானின் பிரம்மோத்சவம்

1 /7

சிலர் பழைய பாத்திரங்களை வைத்திருப்பார்கள். தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, உடைந்த அல்லது விரிசல் அடைந்த எஃகு, பிளாஸ்டிக், செம்பு பாத்திரங்களை அகற்றிவிடவும். இவை மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. 

2 /7

நின்றுபோன கடிகாரம், வாஸ்து படி மிகவும் எதிர்மறையானது. அது, உங்கள் நல்ல நேரத்தை நிறுத்துவதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கிறது. எனவே, வீட்டில் உள்ள கடிகாரம் சேதமடைந்தால், அதை சரி செய்து பயன்படுத்தவும், அல்லது வீட்டில் இருந்து அகற்றிவிடவும்  

3 /7

தீபாவளி என்பது ஒளியின் திருவிழா. இந்த சந்தர்ப்பத்தில் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஒளியை நிரப்ப வேண்டும். ஒளி இருக்கும் இடத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். பழுதடைந்த விளக்குகளை அகற்றிவிடவும்

4 /7

தேவைக்கு அதிகமாக காலணிகள், செருப்புகள் இருக்கும்போது, வீணாகிப் போன காலணிகளையும் வீட்டில் வைத்திருக்கும் வாய்ப்பு உண்டு. இது அதிர்ஷ்டத்தை போக்கச் செய்யும். பயன்படாத மற்றும் பழைய செருப்புகளை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுங்கள்

5 /7

உடைந்த சிலைகளை வீட்டில் வைக்கக் கூடாது  

6 /7

இந்த ஆண்டு தீபாவளி திருநாள் வருவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. தீபாவளிக்கு முன் வீட்டை சுத்தம் செய்யும் போது மேற்கூறிய பொருட்களை அகற்றவும்.

7 /7

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. Zee Media இதை உறுதிப்படுத்தவில்லை.)