உறவில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா...? இந்த Safe Love குறித்தும் தெரிந்துகொள்ளுங்கள்!

Relationship Tips: ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக மட்டுமின்றி பாதுகாப்பானதாகவும் திருமண உறவு (Safe Love) இருக்க இந்த 5 விஷயங்களை பின்பற்ற வேண்டும் என வல்லுநர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார். அவற்றை இங்கு காணலாம். 

திருமணமோ, காதலோ வாழ்வின் முக்கியமான பகுதியாகும். இதில் மட்டும் அசட்டையாகவோ, பொறுப்பில்லாமோ இருந்துவிட்டால் வாழ்க்கை கசப்பானதாகிவிடும். திருமண உறவு ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக, பாதுகாப்பானதாக இருந்தால் மட்டுமே வாழ்வும் சிறக்கும்.

 
 
1 /9

காதல் உறவிலோ, திருமண உறவிலோ ஆண் - பெண் இருவரும் சேர்ந்து சமமான முயற்சியை மேற்கொண்டால்தான் ஆரோக்கியமான உறவாக அது உருமாறும்.   

2 /9

ஆரோக்கியமான உறவு என்பது தம்பதிக்கு இடையிலான புரிதல், தகவல் தொடர்பு, உரையாடல், நம்பிக்கை, விஸ்வாசம், விட்டுக்கொடுக்கும் பண்பு ஆகியவற்றை குறிக்கும்.   

3 /9

அந்த வகையில் இந்த ஆரோக்கியமான உறவைதான் Safe Love அதாவது பாதுகாப்பான காதல் என்கின்றனர் வல்லுநர்கள். இந்நிலையில், வல்லுநர் சதாஃப் சித்திக் உறவை ஆரோக்கியமானதாக, மகிழ்ச்சிகரமானதாக, பாதுகாப்பானதாக மாற்ற தம்பதிகள் செய்ய வேண்டிய சில விஷயங்களை குறிப்பிடுகிறார். அவற்றை இங்கு காணலாம்.   

4 /9

செயலின் மூலமாகவும், வார்த்தையினாலும் நீங்கள் தொடர்ச்சியாக உங்கள் பார்ட்னருக்கு பாதுகாப்பான காதலை வழங்க வேண்டும். நம்பிக்கைதான் உணர்ச்சி ரீதியான இணைதலுக்கு அடிப்படையானது. எனவே நம்பிக்கை மெதுவாகவும், வலுவாகவும் ஊட்ட வேண்டும்.   

5 /9

எப்போதும் பார்ட்னருடன் பரிவுடன் நடந்துகொள்வதும் அவசியம். அவர் செய்யும் செயலில் உங்களுக்கு உடன்பாடு இல்லையென்றாலும் கூட பரிவுடன் நடந்துகொள்வதுதான் சிறப்பானதாக இருக்கும். கருத்தொற்றுமை இல்லையென்றாலும் கூட இருவரும் பாசமாக இருப்பதே பாதுகாப்பான உறவின் ஒரு பகுதியாகும். 

6 /9

பார்ட்னரை விமர்சிப்பதையும், மூன்தீர்மானம் செய்வதையும் எப்போதும் பின்பற்றக்கூடாது. இவற்றை எப்போதும் நினைவில்வைத்துக்கொள்ள வேண்டும். எதையும் அன்பாலும், அக்கறையாலுமே சீராக்க முடியும்.   

7 /9

அதேபோல், உறவில் பார்ட்னர் சொல்வதை காது கொடுத்து கேட்கக் கூடியவராக இருக்க வேண்டும். பார்ட்னர் பேசுகிறார் என்றாலோ அவரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்திகிறார் என்றாலோ அதனை முழு கவனத்துடன் காது கொடுத்து கேட்டு அதற்கேற்ப பதிலளிக்க வேண்டும். நீங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு எவ்வளவு தூரம் மதிப்பளிக்கிறீர்களோ அவ்வளவு தூரம் உங்கள்  உறவு ஆரோக்கியமாக செல்லும்.   

8 /9

உறவில் திறந்ததன்மையுடன் இருப்பதும், நேர்மையாக இருப்பதும் அவசியம். அதேபோல், பார்ட்னர் நம்மிடம் எதையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய சூழலை ஆரம்பத்திலேயே உருவாக்க வேண்டும். வெளிப்படைத்தன்மையாக இருந்தால் மட்டுமே அவர்களும் வெளிப்படையாக இருப்பார்கள்.  

9 /9

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் வல்லுநர் சதாப் சித்திக் கூறிய கருத்துகள் ஆகும். எனினும் நீங்கள் இவற்றை பின்பற்றும் முன்னர் உங்களுக்கான வல்லுநரிடம் சென்று ஆலோசனை பெறுவதும் நல்லது. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.