மீண்டும் பிரச்சனையில் சிக்கிய சிம்பு! இனி படங்களில் நடிக்க முடியாது?

சிலம்பரசன் டிஆர் & விஷால் உட்பட 5 நடிகர்களுக்கு ரெட் கார்டு வழங்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு.  ரெட் கார்டு போட்டால் எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் நடிக்க முடியாது.

 

1 /5

ரெட் கார்டால் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து நகைச்சுவை நடிகர் வடிவேலு விலகியிருந்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது. இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

2 /5

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கி கால்ஷீட் கொடுக்காமல் ரெட் கார்டு போடும் நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்.   

3 /5

சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, விஷால், யோகிபாபு ஆகியோர் புகார் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு மீது ஐசரி கணேஷ் புகார் அளித்துள்ளார். அதேபோல் நடிகர் எஸ்.ஜே.சூர்யா மீது ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா, விஷால் மீது கேபி பிலிம்ஸ் பாலு, அதர்வா மீது தயாரிப்பாளர் மதியழகன் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.  

4 /5

இது தவிர தமிழ் திரையுலகில் மிகவும் பிசியாக இருக்கும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு மீது பல தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர். ஒரு சில நடிகர்கள் மட்டும் நடிகர் சங்கத்திடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் அளிக்கும் பதிலின் அடிப்படையில் அவர்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.  

5 /5

மேற்கண்ட நடிகர்கள் மீதான புகார் குறித்து உரிய விளக்கம் அளித்தால் படங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்றும், அவர்கள் அளிக்கும் விளக்கம் திருப்திகரமாக இல்லாவிட்டால் ரெட் கார்டு போடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தயாரிப்பாளர் சங்க நிதியை முறையாக கையாளாத விஷால் தலைமையிலான நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.