ராகு - கேது பெயர்ச்சியினால் இன்னல்களை சந்திக்க போகும் ‘சில’ ராசிகள்!

ராகு கேது பெயர்ச்சி 2023 பலன்கள்: ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. ராகு-கேதுவின் ராசி மாற்றத்தால் சில ராசிகள், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றம் கிட்டத்தட்ட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறிது பாதிப்பை ஏற்படுத்துகிறது. ராகு-கேது தீங்கு விளைவிக்கும் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. 

ராகு கேது பெயர்ச்சி 2023 பலன்கள்: ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாக கருதப்படுகின்றன. ராகு-கேதுவின் ராசி மாற்றத்தால் சில ராசிகள், பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். ராகு மற்றும் கேதுவின் ராசி மாற்றம் கிட்டத்தட்ட அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் சிறிது பாதிப்பை ஏற்படுத்துகிறது. ராகு-கேது தீங்கு விளைவிக்கும் கிரகம் என்று அழைக்கப்படுகிறது. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

 

1 /5

ராகு - கேது அசுப கிரகங்களாகக் கருதப்படுகின்றன. ராகு 30 அக்டோபர் 2023 அன்று திங்கட்கிழமை இரவு 12.03 மணிக்கு மீன ராசிக்குள் நுழைகிறது. இந்த நாளில் மற்றும் இந்த நேரத்தில், கேது கிரகம் கன்னியில் நுழையும். இந்த நேரத்தில், 4 ராசிக்காரர்களுக்கு  மிகவும் கடினமான காலமாக இருக்கும், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

2 /5

மேஷ ராசிக்காரர்கள் ராகு-கேது  பெயர்ச்சி காலத்தின் போது, ​​நிம்மதியை தொலைக்கும் வாய்ப்பு உள்ளது. நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.இதுமட்டுமின்றி, பல வகையான பிரச்சனைகளும் சூழ்ந்துவிடும். வாழ்க்கைத்துணையுடன் உறவில் விரிசல் அதிகரிக்கும்.

3 /5

ரிஷப ராசியினருக்கு ராகு-கேதுவின் பெயர்ச்சி காலத்தின் போது, வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் சிரமங்களை சந்திக்க நேரிடலாம். வேதனையளிக்கும் காலமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும், இதனால் வீட்டின் பண இருப்பு வெகுவாக குறையும். இந்த நேரத்தில், நிதி விவகாரங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.  

4 /5

கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு-கேதுவின் சஞ்சாரம் சாதகமற்ற பலனைத் தரும். எல்லா துறைகளிலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஒரு நபர் தொழில் மற்றும் வேலையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதே சமயம், அன்புக்குரியவர்களுடனான உறவில் கசப்பு ஏற்படலாம்.  இந்த நேரம் கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும். 

5 /5

மீன ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். கடனை சமாளிக்க சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்படும். இந்த நேரம் பிரச்சனைகள் நிறைந்ததாக இருக்கும். மிகவும் மன உளைச்சலைக் கொடுக்க கூடியதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் எல்லா வகையிலும் சாதகமற்றதாக இருக்கும்.