’எனக்கு அவரு வேண்டாம்’ நடிகை ரச்சிதா முடிவு - கணவர் ரியாக்ஷன்

சின்னத்திரை நடிகை ரச்சிதா தனது கணவர் மீது போலீஸில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

1 /7

நடிகை ரச்சித்தா சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருக்கிறார். விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என பல்வேறு தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  

2 /7

அவரைப் போலவே அவருடைய கணவர் தினேஷூம் சீரியல்களில் நடிக்கிறார். இருவரும் திருமணமானது முதல் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர்.  

3 /7

ஆனால், அவர்களுக்கு இடையேயான உறவு இப்போது சுமூகமாக இல்லை. இதனால் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  

4 /7

கணவர் தினேஷ் ரச்சிதாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று விரும்பினாலும், அதற்கு ரச்சிதா இப்போது தயாராக இல்லை.  

5 /7

காவல்நிலையம் வரை புகார் சென்றுவிட்டதால் விவாகரத்து பெறும் முடிவுக்கு ரச்சித்தா வந்துவிட்டதாக தெரிகிறது.   

6 /7

இருந்தாலும் இந்தப் பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ள விரும்புகிறாராம் ரச்சிதாவின் கணவர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்ற முடிவில் ரச்சிதா இருப்பதாக கூறப்படுகிறது.  

7 /7

சின்னத்திரையில் நல்ல ஜோடியாக வலம் வந்தவர்களுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனை, சக நடிகர்களையும் வருத்தப்பட வைத்திருக்கிறதாம்.