ராசிபலன் 2023: வேலையில் வெற்றிகளை குவித்து அங்கீகாரத்தை பெறும் ‘5’ ராசிகள்!

ராசிபலன் 2023: சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக 2023 ஆம் ஆண்டு சிறப்பாக இருக்கும். புத்தாண்டு இவர்களின் வேலையில், தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தையும் பணத்தையும் கொடுக்கப் போகிறது. புத்தாண்டில் புதன் மற்றும் சூரியனின் நிலையே இதற்குக் காரணம். 2023-ம் ஆண்டின் வருடாந்திர ஜாதகப்படி, 5 ராசிக்காரர்கள் வேலை, வியாபாரம் போன்றவற்றில் அதிர்ஷ்டசாலிகளாகி புதிய வேலையில் சேருவார்கள்.

1 /5

மேஷம்- புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்கள் சூரியன், புதன், வியாழன் ஆகிய கிரகங்களின் சஞ்சாரத்தால் வேலையில், தொழிலில் பெரிய பலன்களைப் பெறலாம்.  சிற்ந்த சம்பள பேகேஜுடன் புதிய வேலையைப் பெறுவதில் அவர்கள் வெற்றிபெற முடியும். 

2 /5

சிம்மம் - சிம்ம ராசிக்காரர்களுக்கு 2023-ம் ஆண்டு பல விஷயங்களில் அற்புதமாக அமையப் போகிறது. இந்த நபர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய நன்மைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், புதிய வேலையின் மூலம் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளும் திறக்கப்படும். குழந்தைகளாலும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

3 /5

துலாம்- 2023 துலாம் ராசிக்காரர்களுக்கு வேலை ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் நன்மை பயக்கும். வேலை தேடுபவர்களின் தேடல் முடிவடையும். உங்களுக்கு விருப்பமான வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உறவுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.

4 /5

தனுசு - தனுசு ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு பலன் தரும். இவர்களுக்கு வேலையில் பதவி உயர்வும், புதிய வேலை வாய்ப்பும் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் பெரிய பலன்களைப் பெறலாம்.

5 /5

கும்பம்- 2023 ஆம் ஆண்டு கிரகப்பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும். பெரிய பேக்கேஜில் புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். பெரிய ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்படும். கடின உழைப்புக்கு முழுப் பலன் கிடைத்து மிக்க மகிழ்ச்சி அடைவீர்கள். (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)