பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இவர்களுக்கு பழைய நிலைக்கு திரும்புவதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும் 5 உணவுகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.
தாய்மை அடைவது என்பது இனிமையான உணர்வாகும். ஆனால் இதற்குப் பிறகு பெண்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்குப் பிறகு, பெண்கள் சாப்பிடும் உணவு முதல், பானம் வரை அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில் பிரசவத்திற்குப் பிறகு உடல் எடை அதிகரிப்பு மிக வேகமாக ஆரம்பித்துவிடுகிறது. பிரசவத்திற்குப் பிறகு பழைய நிலைக்குத் திரும்புவது மிகவும் சவாலானது. ஆனால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் ஐ ஃபாலோ செய்தால் சுலபமாக உடல் எடையை குறைக்கலாம்.
ஓட்ஸில் கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால், இவை உடல் எடையைக் கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவும். எனவே பிரசவத்திற்குப் பிறகு காலை உணவாக ஓட்ஸை உட்கொள்ளலாம்.
பருப்பு வகைகளை உட்கொள்வது நமக்கும் குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால், சமச்சீரான உணவாக பருப்பு கருதப்படுகிறது. இதை சூப் அல்லது கிச்சடி வடிவில் உட்கொள்ளலாம்.
பாதாம் உடல் எடையை அதிகரிக்காமல் கட்டுப்படுத்த உதவும். மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம், கால்சியம் போன்ற தனிமங்கள் பாதாமில் உள்ளதால், இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
மஞ்சள் உணவின் சுவையை மட்டும் அதிகரிக்க உதவுவாதில்லை, இவை உடல் எடையையும் கட்டுப்படுத்த உதவும். இதில் இருக்கும் வைட்டமின்-பி6, பொட்டாசியம் மற்றும் மாங்கனீசு போன்ற தனிமங்கள் எடை அதிகரிக்காமல் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.
வெந்நீர் குடிப்பது உடல் எடையை எளிதில் குறைக்க உதவும். நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது, இது உணவின் செரிமானத்தை மேம்படுத்தி, உடல் எடையை அதிகரிக்கமால் வைத்திருக்க உதவும்.
இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.