சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!

Venus Transit June 12 :சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கத்தால் எந்த ராசிக்கு நன்மை தீமை என்று பார்ப்பது இருக்கட்டும்... இறைவழிபாடு வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...  சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்...

ஜூன் 12ம் தேதியன்று நடைபெறவிருக்கும் சுக்கிரனின் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் நேர்மறை மற்றும் பாதகமான பலன்களைத் தரப்போகிறது. ஆனால், இந்த வழிபாடு அனைவருக்கும் நன்மையை மட்டும் தான் தரும்...

1 /13

ஜூன் 12 ஆம் தேதி சுக்கிரன் பெயர்ச்சியாகும்போது ஏற்படும் நன்மை தீமைகளை சமநிலைப்படுத்துவது ஒருவரின் நம்பிக்கைத் தான். அந்த நம்பிக்கையைத் தரும் இறைவழிபாடுகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்  

2 /13

கன்னி ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். செவ்வாய்கிழமையன்று துர்க்கை வழிபாடு செய்வது நல்லது

3 /13

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் செலவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். ஓம் பார்கவாய நம என்ற மந்திரத்தை தினமும் 33 முறை சொல்வது பிரச்சனைகளைத் தீர்க்கும்

4 /13

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிக அலைச்சலைக் கொடுக்கும். மன அழுத்தம் ஏற்படலாம். பிறருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் நாவடக்கமாக இருக்கவும். 'ஓம் மாண்டாய நம' என்ற மந்திரத்தை தினமும் 41 முறை சொல்லுங்கள்

5 /13

தனுசு ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் மனதில் அமைதியில்லாமல் இருக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளால் பிரச்சனைகள் மற்றும் இழப்புகளை சந்திக்க நேரிடும். ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை தினமும் 41 முறை உச்சரிக்கவும்

6 /13

மீன ராசிக்காரர்களுக்கு, சுக்கிரன் பெயர்ச்சியால் லாபம் மட்டுமல்ல, நஷ்டமும் ஏற்படலாம்.  செலவுகள் அதிகரிக்கும். குரு பகவானை வணங்கி வந்தால் நல்லது

7 /13

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் மிதமான அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்தவும். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றவும்

8 /13

சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி நல்லது செய்யும் என்றாலும், குடும்பத்தினருடன் நல்ல உறவைப் பேணுவதில் கவனம் செலுத்தவும். ஞாயிற்றுக்கிழமையன்று சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது

9 /13

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் வேலையில் மாற்றம் ஏற்படலாம். மிதுன ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி போது செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஒருவருக்கு மருத்துவ செலவு அதிகரிக்கும் என்பதால், சனிக்கிழமையன்று கால பைரவருக்கு பூஜை செய்யுங்கள்

10 /13

சுக்கிரன் பெயர்ச்சியால் கடக ராசியினரின் குடும்பப் பிரச்சனைகள் அதிகரிக்கும், செய்யும் வேலைகள் முடிந்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது.  சனிக்கிழமையன்று சிவனை வழிபட்டு, அன்னதானம் செய்யவும்

11 /13

மிதுன ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு அருமையான நேரம். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.  தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை படித்து வந்தால் வாழ்வில் வளம் சேரும்

12 /13

மேஷம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியால் பண இழப்பு, எதிர்பார்த்த பணம் வராமல் போவது என பிரச்சனைகள் அதிகரிக்கும். 'ஓம் சுக்ராய நம' என்ற மந்திரத்தை தினமும் சொல்லுங்கள்

13 /13

கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி நன்மையானதாக இருக்கும். ஓம் பாஸ்கராய நம என்ற மந்திரத்தை தினமும் 19 முறை சொன்னால், மகிழ்ச்சியாக வாழலாம்