வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு! சுக்கிரனும் மயங்கும் லட்சுமி பூஜை செய்வது எப்படி?

Friday Worship For Wealthy Life: வெள்ளிக்கிழமை தமிழர்களின் வாழ்வில் மங்களகரமான நாள். இந்த நாளில் அன்னை வழிபாடு முக்கியமானது. செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் செய்யும் வழிபாடுகள் பணத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.  

செல்வம் என்றால், பணம், நகை சொத்து என்பது மட்டுமல்ல, நிம்மதி, மகிழ்ச்சி, குழந்தை, வாழ்க்கைத்துணை, அறிவு உட்பட பல செல்வங்கள் உள்ளன. இவை அனைத்தையும் வெள்ளிக்கிழமையில் லட்சுமியை வணங்கினால் கிடைக்கும்  

1 /8

வெள்ளிக்கிழமையில் தெய்வங்களை வணங்கி வந்தால், வறுமை நீங்கி வளம் பெற்று வாழலாம். வெள்ளிக்கிழமை நாளில் தொடர்ந்து செய்து வரும் பூஜைகள், வீட்டில் செல்வ வளத்தை கொண்டு வந்து சேர்க்கும்

2 /8

செல்வம் நிலைக்கவும், மேன்மேலும் விருத்தியடையவும், அன்னை லட்சுமியை எப்படியெல்லாம் வணங்கலாம் என்பதைத் தெரிந்துக் கொண்டால் வளமுடன் வாழலாம்

3 /8

திருப்பதி பெருமாளின் மார்பில் உறையும் லட்சுமி அன்னை, செல்வத்துக்கு அதிபதி.  விஷ்ணுபத்னி லக்ஷ்மி அன்னையையும் வணங்கி வளமுடன் வாழலாம்

4 /8

வெள்ளிக்கிழமை நாளன்று வீட்டில் விளக்கேற்றி, இனிப்பு நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்

5 /8

பூஜை செய்யும்போது, லட்சுமி அஷ்டோட்த்திரம் போன்ற மந்திரங்களை சொல்லி வணங்கவும்

6 /8

வெள்ளிக்கிழமை நாள் சுக்கிரனுக்கு உகந்த நாள், அன்று லட்சுமியை வணங்கினால் சுக்கிரன் கடாட்சமும் கிடைக்கும்

7 /8

சுக்கிர தோஷங்களையும் போக்க வெள்ளிக்கிழமை வழிபாடு உதவும்

8 /8

பூஜை செய்த பிறகு, ஆரத்தி காண்பித்து, படைத்த பிரசாதத்தை அனைவருக்கும் வழங்கினால், அன்னை லட்சுமியும் சுக்கிரனும் உங்களுக்கு செல்வ கடாட்சத்தை வழங்குவார்கள்