‘எப்படியிருந்தவர் இப்படி ஆகிட்டாரே..’ பிரசாந்தை கண்டு கலங்கும் நெட்டிசன்கள்!

GOAT Poster: விஜய் நடித்து வரும் அவரது 68வது படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து, இதில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து வரும் பிரசாந்தை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். 

Vijay Starrer GOAT Movie Venkat Prabhu Direction Prashanth Plays Important Role: முதல் முறையாக வெங்கட் பிரபுவும் விஜய்யும் கைக்கோர்த்து இணைந்துள்ள படம், கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த படத்தை அனைவரும் சுருக்கமாக GOAT என்று குறிப்பிடுகின்றனர். நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் போஸ்டர் பொங்கல் தினத்தன்று (நேற்று) வெளியானது. இதில், விஜய்யுடன் பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் இருப்பது போன்ற போஸ்டர் வெளியானது. 

1 /7

90ஸ்களில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர், பிரசாந்த். இயக்குநரும் நடிகருமான தியாகராஜனின் மகனான இவர், வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானார். இவர் அடுத்தடுத்து நடித்த பல படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க, தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 

2 /7

விஜய்யின் 68வது படமான ’Greatest Of All Time’ படத்தில் பிரசாந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பல ஆண்டுகளாக தமிழ் படங்கள் எதிலும் நடிக்காத இவர், இந்த படம் மூலம் ரீ-எண்ட்ரி கொடுக்க உள்ளார். 

3 /7

பிரசாந்த், நடிப்பில் கடந்த 15 ஆண்டுகளில் வெளியான பெரும்பாலான படங்கள் தோல்வியை தழுவின. குறிப்பாக மம்பட்டியான் படத்திற்கு பிறகு இவர் நடித்த புலன் விசாரணை 2, சாகசம், ஜானி உள்ளிட்ட படங்கள் வந்த தடமும் தெரியவில்லை போன இடமும் தெரியவில்லை என்ற கருத்துக்களையே ரசிகர்களிடம் இருந்து பெற்றது. 

4 /7

2018ஆம் ஆண்டிற்கு பிறகு, பிரசாந்த் ‘கோட்’ படம் மூலமாகத்தான் தமிழ் திரையுலகிற்குள் மறு பிரவேசம் செய்ய உள்ளார். 

5 /7

பிரசாந்த் நடிப்பில், அந்தாகன் என்ற படத்தின் படப்பிடிப்பு எப்போதோ நடைப்பெற்று நிறைவடைந்தது. இது, இந்தி படமான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தில் இவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

6 /7

பொங்கல் தினத்தை முன்னிட்டு ’கோட்’ படத்தின் போஸ்டர் வெளியானது. இதில், விஜய்க்கு பின்னால் துப்பாக்கியுடன் பிரசாந்த் நிற்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை கோட் ஸ்குவாட் என்று பலர் அழைத்து வருகின்றனர். ஒரு காலத்தில் ஹிட் ஹீரோவாக இருந்த பிரசாந்த், இப்போது இன்னொரு ஹீரோவிற்கு பின்னால் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டாரே என நெட்டிசன்கள் பலர் இந்த போஸ்டரை பார்த்து கலங்கி வருகின்றனர். 

7 /7

கோட் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டில் ஆரம்பித்து தொடந்து நடைப்பெற்று வருகிறது. இப்படம், வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.