ஆதார் கார்ட் இருந்தால் போதும்! ரூ. 50,000 வரை கடன் பெறலாம்! எப்படி விண்ணப்பிப்பது?

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆதார் கார்ட் வைத்திருந்தால் அரசு, ரூ. 50000 வரை கடன் தருகிறது. எப்படி விண்ணப்பிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

1 /6

மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா (PM Svanidhi Yojana) திட்டத்தை தொடங்கியது. கொரோனா நோய் தொற்று காலத்தில் இந்த திட்டம் தொடங்கியது.

2 /6

தெருவோர வியாபாரிகள், சிறு வியாபாரிகள் பலன் பெற இந்த திட்டம் அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகள் எந்தவித உத்தரவாதமின்றி ரூ. 50,000 வரை கடன் பெற்று கொள்ள முடியும்.

3 /6

இந்த திட்டத்தில் முதலில் ரூ. 10,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதனை சரியாக திருப்பி செலுத்தினால் அடுத்த முறை ரூ. 20,000 பெறலாம். அதனையும் சரியாக செலுத்தினால் ரூ. 50,000 தரப்படுகிறது.

4 /6

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தின் கீழ் கடன் பெற, ஆதார் அட்டை அவசியம் தேவையான ஒன்று. அரசு வங்கியில் நேரடியாக இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பித்து, 12 மாதங்களுக்குள் தவணை முறையில் திருப்பி செலுத்தி கொள்ளலாம்.

5 /6

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் முன்பு ஆதாருடன் உங்கள் மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கவும். கடன் வாங்குபவர்கள் நகர்ப்புற அலுவலகத்தில் கடை வைத்திருப்பதற்கான கடிதம் பெற வேண்டும்.  

6 /6

பிரதான் மந்திரி ஸ்வநிதி யோஜனா திட்டத்தில் நான்கு வகையான விற்பனையாளர்களுக்கு கடன் கொடுக்கப்படுகிறது. தகுதியுடையவர்கள் விண்ணப்பித்து பலன் பெறலாம்.