முகப்பரு பிரச்சனையா? உடனடியாக நீங்கி சருமத்தை பாதுகாக்க ஈஸியான 5 வழிகள்!

முகத்தில் தோன்றும் பருக்கள் பலருக்கும் கவலையை அளிக்கிறது, இதுபோன்று பருக்கள் வராமல் தடுக்க சில இயற்கையான வழிகளை பின்பற்றலாம்.

1 /5

முகத்தை நன்கு க்ளென்ஸ் செய்வது அவசியம், முகத்தை அழுத்தி தேய்த்து கழுவாமல் நல்ல க்ளென்சர் கொண்டு லேசாக மசாஜ் செய்து கழுவ வேண்டும். வெள்ளரிக்காய், கிரீன் டீ போன்ற பொருட்கள் கலந்த அதிகம் எரிச்சலை உண்டாக்காத க்ளென்சர்களை பயன்படுத்த வேண்டும்.

2 /5

சோற்றுக்கற்றாழை ஜெல் முகப்பருவை நீக்கி முகத்தை பளபளப்பாக்கும் ஒரு சிறந்த இயற்கையான பொருள். குறைந்தது ஒருநாளைக்கு இரண்டு முறை இந்த சோற்றுக்கற்றாழை ஜெல்லை முகத்திற்கு பயன்படுத்தி வர முகப்பரு காணாமல் போய்விடும்.

3 /5

டீ ட்ரீ ஆயில் முக பொலிவிற்கும், பருக்களை நீக்குவதற்கும் உதவுதாக பல ஆய்வுகள் கூறுகின்றன, இதனை தினமும் பயன்படுத்தலாம். சிலருக்கு நேரடியாக இதனை பயன்படுத்துவதால் ஒவ்வாமை ஏற்படலாம் அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.

4 /5

3-4 நிமிடங்களுக்கு முகத்தில் ஐஸ் கட்டிகளை வைத்து லேசாக மசாஜ் செய்வது நன்மையளிக்கும். நேரடியாக முகத்தில் தேய்க்காமல் ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் தேய்க்க பருக்கள் மறைந்துவிடும்.

5 /5

பருக்களை தடுப்பதில் முக்கியமான ஒன்று இரவு படுக்கும் முன் உங்கள் மேக்கப்புகளை முழுவதுமாக அகற்றுவது. மேக்கப்புக்கு பயன்படுத்தும் ப்ரஷ், ஸ்பாஞ்ச் போன்றவற்றையும் சுத்தமாக வைத்திருங்கள்.