மனச்சோர்வை நான் நெருக்கமாக அறிந்திருக்கிறேன் என "மிர்சாபூர்" படத்தின் நடிகை அனங்ஷா பிஸ்வாஸ் (Anangsha Biswas) கூறியுள்ளார்.
புதுடெல்லி: மனச்சோர்வை குறித்து தனக்கு நன்கு தெரியும் என்று "மிர்சாபூர்" பட நடிகை அனங்ஷா பிஸ்வாஸ் (Anangsha Biswas) கூறியுள்ளார். அதாவது, நீங்கள் உணர்திறன், உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தால், மனச்சோர்வு என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று அல்ல. ஆம் நான் மனச்சோர்வை நெருக்கமாக அறிந்திருக்கிறேன் என்றார்.
அவர் செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்ஸிடம் (IANS) பேசுகையில், எனக்கு சுயமரியாதை, சுய மதிப்பு இல்லாதது. என்னை எப்படி நேசிப்பது என்று எனக்குத் தெரியவில்லை. என்னை நானே மதிக்கவில்லை. எனவே, என்னைப் பற்றிய மற்றவர்களின் உணர்வுகள் எனக்கு மகிழ்ச்சியாகவோ சோகமாகவோ இருக்கும்.
அனாங்ஷா கூறுகையில், அவர் அடிக்கடி ஒரு தவறான பொருளைப் போல தன்னை உணர்ந்தார். ஒரு சமயத்தில் தான் தனியாக இருப்பதை உணர்ந்தார்.
அவர் மேலும் கூறுகிறார், "நான் ஒரு நல்ல நடிகை என்று பலரால் கூறப்பட்டிருந்தாலும், ஆனால் எனக்கு புதிய படவாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இந்த விசியங்கள் எனது மனதில் ஆழமாக பாதித்தது.
இதை எல்லாம் எவ்வாறு சமாளித்தார் என்பதை அவர் பகிர்ந்து கொண்டார். "நான் சோர்வாகவும் மன அழுத்தத்தில் இருக்க பிடிக்கவில்லை. எனவே என் வலியை நிறுத்த வேண்டும் என்று நான் விரும்பினேன். எனக்கு நானே உதவ முடியும் என்பதை உணர்ந்தேன். எனது மூத்த சகோதரி மற்றும் தந்தையிடம் உதவி கோரினேன்.
யோகாவும் தியானமும் எனக்கு உதவின. "உங்களை நேசிப்பது, உங்களை நீங்களே ஏற்றுக்கொள்வது, உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்வது, மனச்சோர்வைப் பற்றி படிப்பது மற்றும் அதை எவ்வாறு சரிசெய்வது என்பது முக்கியம்" என்றார்
(புகைப்பட உபயம்: அனைத்து புகைப்படங்களும் அனங்ஷா பிஸ்வாஸின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டது)