சூரிய கிரகணத்தின் போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை மண்ணில் புதைத்து வைத்த பெற்றோர்கள்.
புதுடெல்லி: 2019 ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் (Solar Eclipse) இன்று (வியாழக்கிழமை) அனுசரிக்கப்பட்டது. இந்த சூரிய கிரகணம் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் காணப்பட்டது. நமது நாட்டின் தெற்குப் பகுதியில் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு சூரிய கிரகண வளையம் தென்பட்டது. இந்த சூரிய கிரகணம் டெல்லி உட்பட நாட்டின் வட பகுதிகளிலும் ஓரளவுக்கு தெரிந்தது. இந்தியாவில் சூரிய கிரகணம் காலை 8 மணிக்கு தொடங்கியது. சூரிய கிரகணம் அன்று நாட்டில் இன்னும் பல இடங்களில் மூடநம்பிக்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதுக்குறித்து புகைப்படத்தொகுப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.