SBI Pension Loans: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களின் வசதியை அதிகரிக்க அவ்வப்போது பல புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறது. ஓய்வுபெற்ற ஊழியர்களின் தேவைகளை மனதில் வைத்து SBI ஓய்வூதிய கடன்களை வழங்குகிறது.
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய ஓய்வூதிய கடனுக்கு மிக எளிதாக விண்ணப்பிக்கலாம். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஓய்வூதிய கடன் திட்டத்தின் கீழ், SBI இந்த கடன் வசதியை 9.75 சதவீத வட்டி விகிதத்தில் வழங்குகிறது.
இந்த கடன் மிகவும் எளிதானது. எந்த இடையூறும் இல்லாமல் உங்கள் குழந்தைகளின் திருமண செலவுகளை பூர்த்தி செய்வதற்கும், உங்கள் கனவு வீட்டை வாங்குவதற்கும், பயணங்களை மேற்கொள்வதற்கும், மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இது மிகவும் உதவியாக இருக்கும்.
இந்த கடன் சிறப்பம்சம் வாய்ந்தது. ஏனெனில் இதற்கு குறைந்த செயலாக்க கட்டணத்தை செலுத்தினால் போதும். இதில் மறைமுக கட்டணம் எதுவும் இல்லை. மேலும், இதில் கடன் பெறுவதற்கான செயல்முறை மிகவும் வேகமாக உள்ளது. எளிதான EMI வகைகளும் இதில் உள்ளன. மேலும், இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற குறைந்தபட்சம் ஆவணங்களை சமர்ப்பித்தால் போதுமானது. மற்றொரு சிறந்த விஷயம் என்னவென்றால், நீங்கள் SBI-யின் எந்தவொரு கிளையிலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் ஓய்வூதியக் கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது கூடுதல் தகவல்களைப் பெற விரும்பினால், தொடர்பு மையத்தின் கட்டணமில்லா எண் 1800-11-2211 ஐ டயல் செய்யலாம். இது மட்டுமல்லாமல், வங்கியின் தொடர்பு மையத்திலிருந்து திரும்ப அழைப்பைப் பெற 7208933142 என்ற தொலைபேசி எண்ணில் மிஸ்ட் கால் கொடுக்கலாம். அல்லது 7208933145 என்ற எண்ணில் "PERSONAL” என்று எழுதி எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.
இது மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஓய்வூதியதாரர்களுக்கானது. இதில், ஓய்வூதியதாரரின் வயது 76 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும், பென்ஷன் பேமெண்ட் ஆர்டர் SBI-யில் இருக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர், அவரது கடன் காலத்தில் கருவூலத்திற்கு அளித்த ஆணையை (Mandate) மாற்ற மாட்டேன் என்று வாக்குறுதி அளிக்க வேண்டும்.
இதன் கீழ், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை, துணை ராணுவப் படைகள் (CRPF, CISF, BSF, ITBP etc.), கடலோர காவல்படை, ராஷ்டிரிய ரைபிள்ஸ் மற்றும் அசாம் ரைபிள்ஸ் உள்ளிட்ட ஆயுதப்படைகளின் ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதில், ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் இருக்க வேண்டும். இதில் குறைந்தபட்ச வயது கட்டுப்பாடு இல்லை. குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 76 ஆண்டுகள் ஆகும். குடும்ப ஓய்வூதியத்தில் ஓய்வூதியம் பெற்றவர்கள் இறந்த பிறகு, குடும்பத்தின் அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்களும் ஓய்வூதியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம்.