ஒரு ப்ளேட் பிரியாணி.. அதிகமில்லை ₹20,000 தான்; அப்படி என்ன தான் இருக்கு

இந்தியா உட்பட பல நாடுகளில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று பிரியாணி என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக பெரும்பாலோர் பிரியாணியின் சுவை பற்றிய தகவலை கூறுவார்கள், ​​ஆனால், இன்று உலகின் மிக விலையுயர்ந்த பிரியாணி பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இந்தியா உட்பட பல நாடுகளில் மிகவும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று பிரியாணி என்பதில் சந்தேகமில்லை. பொதுவாக பெரும்பாலோர் பிரியாணியின் சுவை பற்றிய தகவலை கூறுவார்கள், ​​ஆனால், இன்று உலகின் மிக விலையுயர்ந்த பிரியாணி பற்றி தெரிந்து கொள்ளலாம்.

1 /5

₹20000 விலையில், ராயல் கோல்ட் பிரியாணி துபாய் சர்வதேச நிதி மையத்தில் (DIFC) அமைந்துள்ள பம்பாய் பரோவில் கிடைக்கிறது. (படம்: Instagram)

2 /5

இந்த இடம் பிரிட்டிஷ் கால பங்களா போன்ற கட்டமைப்பை கொண்டுள்ளது மற்றும் சுவையான பிரியாணியை அனுபவிக்க அதன் சுற்றுப்புறம் ஏற்ற வகையில் ரம்மியமாக இருக்கும் (படம்: Instagram)  

3 /5

இந்த ராயல் கோல்ட் பிரியாணியை தயாரிக்க 45 நிமிடங்கள் ஆகும், இது ஒரு பெரிய தங்க  தட்டில் வழங்கப்படுகிறது. இந்த தட்டில் சிக்கன் பிரியாணி ரைஸ், கீமா ரைஸ், மற்றும் வெள்ளை மற்றும் குங்குமப்பூ அரிசி உள்ளிட்ட மூன்று வகை அரிசியால் தயாரிக்கப்பட்ட பிரியாணி பரிமாறப்படுகிறது, சிறிய உருளைக்கிழங்கு மற்றும் வேகவைத்த முட்டைகளுடன் அலங்கரிக்கப்படுகிறது. (படம்: Instagram)  

4 /5

இந்த உணவில் மூன்று வகையான சிக்கன் கிரில்கள்-மலாய் சிக்கன், ராஜ்புதன முர்க் சூலா, மற்றும் சிக்கன் மீட்பால்ஸ் ஆகியவை அடங்கும். மேலும் லாம்ப் சாப்ஸ் மற்றும் லாம்ப் சீக் கபாப் ஆகியவை அடங்கும், புதினா, வறுத்த முந்திரி, மாதுளை மற்றும் பொரித்த வெங்காயம் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. (படம்: Instagram)  

5 /5

பிரியாணி மூன்று சைட் டிஷ்களுடன் வழங்கப்படுகிறது, அதில் நிஹாரி சாலன், ஜோத்புரி சாலன், பாதாமி சாஸ் பாதாம் மற்றும் மாதுளை ராய்தா ஆகியவை அடங்கும். (படம்: Instagram)