இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணத்தில் திருப்பதி பெருமாளின் தரிசனத்துக்காக திருப்பதி சென்றார்.
ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணமாகும் இது.
இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணத்தில் திருப்பதி பெருமாளின் தரிசனத்துக்காக திருப்பதி சென்றார்.
ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணமாகும் இது. இந்த விமானம் அதிகமான எரிபொருள் திறன் கொண்டது. B747-400 ஐ விட நீண்ட தூரம் பயணிக்கக்கூடியது. இவை வி.வி.ஐ.பி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த விமானம் குறைந்த சத்தத்துடன் அதிநவீன உட்புறங்களைக் கொண்டுள்ளது.
ஏர் இந்தியா ஒன்-பி 777 இன் தொடக்க விமானத்தின் போது, கோவிந்த் விமானிகள், குழு உறுப்பினர்கள் மற்றும் ஏர் இந்தியா மற்றும் இந்திய விமானப்படையின் ஒட்டுமொத்த குழுவையும் பாராட்டினார்.
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை ரெனிகுண்டா விமான நிலையத்தில் ராம் நாத் கோவிந்தை வரவேற்றனர். குடியரசுத் தலைவர் காலை 10.45 மணிக்கு விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திருப்பதி வேங்கடாஜலபதி கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை மெற்கொள்வார்.
குடியரசுத் தலைவர் கோவிந்த் ஏர் இந்தியா ஒன்-பி 777 விமானத்தின் முதல் பயணத்தில் டெல்லியில் இருந்து சென்னை வழியாக திருப்பதிக்கு சென்றார். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அவர் புதிய விமானத்திற்கான ஒரு சிறிய பூஜையை செய்தார்.