PM Kisan திட்டத்தின் ரூ.2000 இன்னும் வரவில்லையா? உடனடியாக இதை செய்யவும்

PM Kisan சம்மான் நிதியின் 7 வது தவணையின் 2000 ரூபாய்க்காக நீங்கள் காத்துக்கொண்டிருந்தால், இப்போது உங்கள் காத்திருப்பு முடிந்துவிட்டது. இந்த தவணை ஏராளமான விவசாயிகளின் கணக்குகளில் சேர்க்கப்பட்டு விட்டது. பிரதமர் நரேந்திர மோடி கூறியது போல, டிசம்பர் 25 ஆம் தேதி 9 கோடி விவசாயிகளின் கணக்குகளுக்கு ரூ .18000 கோடி தொகை அனுப்பப்பட்டுள்ளது. 

இந்த தொகை பெரும்பாலான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில தொழில்நுட்ப காரணங்களால், இந்த பணம் இதுவரை உங்கள் கணக்கில் இன்னும் வரவில்லை என்றால், நீங்கள் உடனடியாக உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும். உங்கள் கணக்கின் மினி அறிக்கையை ஒரு முறை சரிபார்க்கவும். பலமுறை கணக்கில் பணம் வந்துவிட்டாலும், மெசேஜ் அதாவது செய்தி வர தாமதமாவதுண்டு. 

1 /5

பிரதமர் கிசான் சம்மான் நிதியின் கீழ் பணம் பெற, உங்கள் பெயர் பட்டியலில் இருக்க வேண்டும். பலரின் பெயர்கள் முந்தைய பட்டியலில் இருந்தன. ஆனால் புதிய பட்டியலில் இல்லை. உங்கல் பெயர் பட்டியலில் இல்லையென்றால், நீங்கள் பிரதமர் கிசான் சம்மானின் ஹெல்ப்லைன் எண்ணில் புகார் அளிக்கலாம். இதற்கு, நீங்கள் 011-24300606 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகார் அளிக்க வேண்டும்.

2 /5

பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்க விரும்பினால், நீங்கள் முதலில் pmkisan.gov.in என்ற வலைத்தளத்திற்குச் செல்லுங்கள். இங்கே முகப்பு பக்கத்தில் உள்ள மெனு பாரில் உள்ள ‘Farmer Corner’-க்கு செல்லுங்கள். இதற்குப் பிறகு, இங்கே பயனாளி பட்டியலின் இணைப்பைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை உள்ளிடவும். இதை நிரப்பிய பிறகு, Get Report என்பதைக் கிளிக் செய்து முழுமையான பட்டியலைப் பெறுங்கள். கிசான் சம்மான் யோஜனா நிதி பற்றி மேலும் விவரங்களை அறிய, www.yojanagyan.in ஐக் கிளிக் செய்யவும்.

3 /5

PM Kisan கட்டணமில்லா எண்: 18001155266 PM Kisan ஹெல்ப்லைன் எண்: 155261 PM Kisan லேண்ட்லைன் எண்கள்: 011-23381092, 23382401 PM Kisan-னின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606 PM Kisan-னின் மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109 மின்னஞ்சல் ஐடி: pmkisan- ict@gov.in

4 /5

உங்கள் கணக்கில் உள்ள பேலன்ஸ் தொகையை சரிபார்க்க, pmkisan.gov.in வலைத்தளத்துடன் நீங்கள் தொடர்ந்து இணைந்திருக்கலாம். இதனுடன், மொபைல் செயலியின் உதவியுடன் உங்களைப் புதுப்பித்துக் கொள்ளவும் முடியும். இந்த செயலியை Google Play Store இலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியில் தவணையின் நிலையும் அறியப்படும்.

5 /5

PM Kisan-ல் பதிவு செய்ய, அருகிலுள்ள சி.எஸ்.சி (பொது சேவை மையம்) க்கு செல்ல வேண்டும். இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்திருந்தால், இந்த பணிகள் அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே நீங்கள் எளிதாக சமாளிக்க முடியும். இந்த செயலியின் மூலம், திட்டத்துடன் தொடர்புடைய தேவையான நிபந்தனைகளை எளிதாக அறிய முடியும்.