மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணத்தின் இறுதிகட்டத்தில் சமூக சேவகராக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாமனிதராக உயர்ந்தார்.
நடிகர் விவேக் இயல்பிலேயே நகைச்சுவை உணர்வும், நடிப்பாற்றலும் கொண்டவர். இவை அனைத்தையும் விட தனது மனிதாபிமானத்தாலும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சேவை மனப்பான்மையாலும் அறியபப்ட்டவர் பத்மஸ்ரீ விருதுக்கு உண்டான த்குதிகளை வளர்த்துக் கொண்டவர். அவரது நினைவலைகளின் தொகுப்பு புகைப்படங்களாக...
Also Read | விவேகானந்தன் என்னும் நடிகர் விவேக்கின் வாழ்க்கைப் பயணம்
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு... இது நடிகர் விவேக்கின் பிரபல வசனம். இன்று மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இன்று மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது.
இன்று காலை 4.35 மணிக்கு காலமான நடிகர் விவேக், கலாமின் அடியை பின்பற்றி நடந்தவர். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது
மனதில் உறுதி வேண்டும்... இது அவர் நடித்த பிரபல திரைப்படம் மட்டுமல்ல, உறுதியாக கடைபிடித்தவர்
புதுப்புது அர்த்தங்கள் கொடுத்த பன்முக நடிகர்
விவேகானந்தன் என்ற இயற்பெயர் கொண்ட விவேக், மிகவும் விவேகமானவர்
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் கனவுக்கேற்ப மரம் நடும் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்
இரு தினங்களுக்கு முன்னர் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் விவேக்
மதுரையில் பிறந்து, திரையுலகில் கோலோச்சி இன்று பலரை அழவைத்து சென்ற உன்னத மனிதன் விவேகானந்தன் என்ற விவேக்...