டைமின் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இடம் பிடித்த இந்தியர்களின் பட்டியல் இது...
சமகால உலகில் தாக்கத்தை ஏற்படுத்திய 100 பேரின் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் முன்னோடிகளாக திகழ்பவர்கள், தலைவர்கள், பிரபலங்கள், கலைஞர்கள் மற்றும் சின்னங்களின் ஆண்டு பட்டியலை டைம் இதழ் வெளியிட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டில் பிரமதராக பதவி ஏற்றதில் இருந்து பிரதமர் மோடி இந்த பட்டியலில் நான்கு முறை இடம் பிடித்துள்ளார். 2014, 2015, 2017 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அவரது பெயர் பெருமைமிகு இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. (Photo: www.pib.gov.in)
மாண்புமிகு என்ற அடைமொழியை தயக்கம் இல்லாமல் பயன்படுத்தலாம் இவருக்கு. பிரதமர் நரேந்திர மோடி அவர்களைப் பற்றி அதிகம் சொல்லவோ, அறிமுகப்படுத்தவோ சொல்ல வேண்டியத் தேவையில்லை. (Photo: www.pib.gov.in)
பாலிவுட் நடிகர் இப்போது உலகில் செல்வாக்கு செலுத்தும் செம்மையான மனிதர்களில் ஒருவர்... (Photo: Twitter/@ayushmannk)
பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானாவும் டைம்ஸ் பத்திரிகையின் செல்வாக்கு மிகுந்த மனிதர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். ஆயுஷ்மான் Forbes India`s Celebrity 100 பட்டியலில் 2013 மற்றும் 2019 ஆண்டு இடம் பிடித்தவர். (Photo: Twitter/@ayushmannk)
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்பதை நிரூபித்த சுந்தர் பிச்சை... (Photo: Twitter/@sundarpichai)
தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை, செல்வாக்கு மிகுந்த பிரபலமாக பட்டியலில் இடம் பெற்றுள்ளார். (Photo: Twitter/@sundarpichai)
டெல்லியின் ஷாஹீன் பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களில் அவரது பங்கிற்காக பில்கிஸ் செல்வாக்கு மிகுந்த நபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து மூதாட்டி பில்கிஸ் போராட்டத்தில் அமர்ந்துவிட்டார். டிசம்பர் மாதக் குளிரும், 82 வயதான மூதாட்டியை தனது இலட்சியத்தில் இருந்து பின்வாங்கச் செய்யவில்லை. (Photo: www.time.com)
பெருமைமிகு இந்தியர், செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவர்.... (Photo: www.time.com)
டாக்டர் ரவீந்திர குப்தா 1990களின் பிற்பகுதியில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டம் பெற்றார். அவரது பணியை அங்கீகரிக்கும் விதமாக, 2019 ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ரவீந்திர குப்தாவை Cambridge Institute of Therapeutic Immunology and Infectious Disease அமைப்பில் மருத்துவ நுண்ணுயிரியல் பேராசிரியராக நியமித்தது. (Photo: Google)