mAadhaar App Update: இனி உங்கள் ஆதார் செயலியில் 5 profile-களை சேர்க்கலாம்

mAadhaar App New Development: UIDAI அவ்வப்போது ஆதார் அட்டை பயன்பாட்டில் பல புதுப்பித்தல்களை செய்து வருகிறது. 

அவற்றை பற்றிய தகவல்களையும் மக்களிடம் உடனுக்குடன் கொண்டு சேர்க்கிறது UIDAI. mAadhaar செயலி குறித்த ஒரு புதிய தகவலை UIDAI வழங்கியுள்ளது.

1 /5

டிஜிட்டல் இந்தியா செயல்முறையை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் 2017 ஆம் ஆண்டில் mAadhaar செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலியை பதிவிறக்கிய பிறகு, பயனர்கள் "ஆதார் அட்டை" ஐ காகித வடிவத்தில் கொண்டு செல்ல தேவையில்லை என்ற வசதி கிடைத்தது.

2 /5

இந்த செயலியில் UIDAI ஒரு புதிய முன்னேற்றத்தைச் செய்துள்ளது. இந்த மேம்பாட்டின் கீழ், mAadhaar இல் இனி 5 பேரின் ஆதார் அட்டை ப்ரொஃபைல்களை சேர்க்கலாம்.

3 /5

ட்வீட் மூலம் mAadhaar செயலி மேம்பாடு குறித்த தகவல்களை UIDAI வழங்கியுள்ளது. முன்னதாக ஒரு mAadhaar செயலியில், மூன்று அதிகபட்ச ப்ரொஃபைல்களை மட்டுமே சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

4 /5

செயலியில், பயனர் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.  

5 /5

ஆதார் அட்டையில் 5 ப்ரொஃபைல்களைச் சேர்க்க, எந்த மொபைல் ஃபோனில் செயலி நிறுவப்பட்டுள்ளதோ, அதே மொபைல் ஃபோன் எண்தான் அந்த ஐந்து ஆதார் அட்டைகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதை உறுதி செய்வது அவசியமாகும்.