நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ அவ்வப்போது வாடிக்கையாளைர்களின் நன்மைக்காக பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. ஜியோ நிறுவனம் லாபகராமன் பல ரீசார்ஜ் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
சமீபத்தில் ஒரு புதிய திட்டத்தை ஜியோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 56GB 4G இணைய வசதி மற்றும் 28 நாட்களுக்கான கூடுதல் செல்லுபடியும் கிடைக்கும்.
ஆம்!! இந்த அரிய திட்டம் ஜியோவின் ரூ .598 மற்றும் ரூ .599 மதிப்பிலான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும். இந்த இரண்டு ரீசார்ஜ் திட்டங்களுக்கு இடையே 1 ரூபாய்க்கான வித்தியாசம் மட்டுமே உள்ளது. முதலில் பார்க்கும்போது, 1 ரூபாய் அதிகமாக கொடுப்பதால் அதிக நன்மைகள் கிடைக்கப்போவதில்லை என வாடிக்கையாளர்களுக்கு தோன்றலாம். ஆனால், இந்த 1 ரூபாய் வித்தியாசம்தான் ஜியோவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!!
ஜியோவின் ரூ .598 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் கால அளவு 56 நாட்கள் மட்டுமே ஆகும். இந்த திட்டத்தை எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2GB அதிவேக 4G தரவு, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்.டி.டி அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகிய நன்மைகள் கிடைக்கும். இதனுடன், நிறுவனம் கூடுதல் கட்டணம் இல்லாமல் ஜியோ ஆப்ஸ் சந்தாவையும், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவையும் 1 வருடம் இலவசமாக வழங்குகிறது.
ஜியோவின் 599 ரூபாய் திட்டத்தைப் பற்றி பேசுகையில், இதில் வாடிக்கையாளர்கள் 2GB அதிவேக 4G இணைய வசதி, வரம்பற்ற உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றின் நன்மைகளைப் பெறுவார்கள். இதன் செல்லுபடியாகும் கால அளவு 84 நாட்களாகும். இது தவிர, ஜியோ செயலியின் இலவச சந்தாவும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.
இந்த இரண்டு திட்டங்களுக்கும் உள்ள வேறுபாடு இங்கு தெளிவாக உள்ளது. அது ஒரே ஒரு ரூபாய்தான். அதாவது, 1 ரூபாயை மட்டும் அதிகமாக செலுத்தினால் போதும், 28 நாட்கள் கூடுதல் செல்லுபடியாகும் தன்மை மற்றும் 56GB இணைய வசதியையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.